தமிழக அரசியல் களத்தில் தேர்தல் களம் சூடுபிடித்திருந்த வேளையில், ஆளுங்கட்சியும் பிரதான எதிர்க்கட்சியும் தங்களின் வியூகங்கள் நிச்சயம் வெற்றியை தரும் என்று அசைக்க முடியாத நம்பிக்கையில் இருந்தன. குறிப்பாக, தேர்தலுக்கு முந்தைய கடைசி மூன்று மாதங்களில் பண பலத்தையும் அதிகார பலத்தையும் பயன்படுத்தி வாக்காளர்களை தங்கள் பக்கம் ஈர்த்துவிடலாம் என்று இரு திராவிட கட்சிகளும் தப்பு கணக்கு போட்டன. ஆனால், களத்தில் நிலவிய அமைதியான புரட்சியை அவர்களால் உணர முடியாமல் போனது. மக்கள் எப்போதும் பணத்திற்கு மயங்கிவிடுவார்கள் என்ற அவர்களின் எண்ணம், ஒரு குறிப்பிட்ட எல்லையை தாண்டியவுடன் எடுபடாது என்பதை இந்த தேர்தல் முடிவுகள் உணர்த்த தொடங்கியுள்ளன.
இந்த சூழலில்தான் “விஜய்” எனும் அரசியல் சுனாமி தமிழகத் தேர்தல் களத்தில் ஊடுருவி, பல தசாப்தங்களாக நிலவி வந்த அரசியல் கணக்குகளை அடியோடு அடித்து சென்றுவிட்டது. மற்ற கட்சிகள் பணத்தை அள்ளி வீசி கொண்டிருந்தபோது, விஜய் தனது கொள்கைகளையும், மாற்றத்திற்கான தேவையையும் மக்கள் மத்தியில் விதைத்து கொண்டிருந்தார். இளைஞர்கள் மற்றும் முதல்முறை வாக்காளர்களின் எழுச்சி, பாரம்பரிய கட்சிகளின் கோட்டைகளை சிதைக்கும் வகையில் அமைந்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். இது வெறும் ஒரு நடிகரின் வருகையல்ல, காலங்காலமாக நிலவி வந்த ஒரு குறிப்பிட்ட அரசியல் கலாச்சாரத்திற்கு மக்கள் அளித்த மரண அடியாகப் பார்க்கப்படுகிறது.
ஒருபுறம் தமிழக வெற்றி கழகத்தின் தொண்டர்கள் தங்கள் தலைவரின் வெற்றியை எண்ணி மிகுந்த Confidentஆ இருக்கிறார்கள். எவ்வித கூட்டணியும் இன்றி, பண விநியோகம் இன்றி தங்களின் உழைப்பை மட்டுமே நம்பி போட்டியிட்டதால், தங்களுக்கு கிடைக்கும் ஒவ்வொரு வாக்கும் நேர்மையானது என்பதில் அவர்கள் உறுதியாக உள்ளனர். தலைவரின் ஒரு சொல்லுக்கு கட்டுப்பட்டு, கோடிக்கணக்கான ரூபாய்களை தூசியாக கருதிய அந்த “அன்புக் கூட்டம்”, தற்போது தேர்தல் முடிவுகள் தங்களுக்கு சாதகமாகவே அமையும் என்ற உற்சாகத்தில் ஆவலோடு காத்திருக்கின்றனர்.
மறுபுறம், பல ஆண்டுகளாக தமிழக அரசியலை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்த திராவிட கட்சிகள் தற்போது ஒருவித கலக்கத்தோடும் நடுக்கத்தோடும் காணப்படுகின்றன. தாங்கள் போட்ட கணக்குகள் எங்கே தடம் புரண்டது, மக்களின் மனவோட்டம் எப்போது மாறியது என்பதை புரிந்து கொள்ள முடியாமல் அவர்கள் திணறி வருகின்றனர். பண பலத்தை தாண்டி ஒரு புதிய சக்தி மக்களிடம் இவ்வளவு பெரிய வரவேற்பை பெறும் என்பதை அவர்கள் சற்றும் எதிர்பார்க்கவில்லை. இந்த கலக்கம், வாக்கு எண்ணிக்கை நெருங்க நெருங்க அவர்களின் முகாம்களில் வெளிப்படையாக தெரிய தொடங்கியுள்ளது.
முடிவாக, தமிழகத்தின் அரசியல் வரைபடம் இந்த தேர்தலோடு ஒரு புதிய பரிமாணத்தை எட்டப்போகிறது என்பது மட்டும் உறுதி. ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் நினைத்தது ஒன்றாக இருக்க, நடந்தது வேறொன்றாக அமையப்போகும் அந்த மே 4-ஆம் தேதி, தமிழக அரசியலில் ஒரு திருப்புமுனையாக அமையும். மக்களின் மௌனமான ஆதரவு ஒரு சுனாமியை போலத் திரண்டு வந்து, மாற்றத்தை விரும்பியவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். விஜய்யின் வருகை ஏற்படுத்திய இந்த தாக்கம், வரும் காலங்களில் மற்ற அரசியல் கட்சிகளையும் தங்கள் பாதையை மாற்றிக்கொள்ள கட்டாயப்படுத்தும் என்பதில் ஐயமில்லை.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
