தாமோதரன் பிரகாஷ் என்பவர் ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், த்ரிஷாவுக்கும் ஜெயலலிதாவுக்கும் ஐந்து பொருத்தங்கள் இருப்பதாகவும், த்ரிஷாவும் முதல்வர் கனவில் இருப்பதாகவும், எனவே தமிழக வெற்றி கழகத்தில் த்ரிஷாவுக்கு கொள்கை பரப்பு செயலாளர் பதவி கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு இருந்த ஐந்து குணங்கள் அப்படியே த்ரிஷாவுக்கு இருப்பதாக தாமோதரன் பிரகாஷ் தெரிவித்துள்ளார். ஜெயலலிதாவும் த்ரிஷாவும் சர்ச் பார்க்கில் படித்தவர்கள்; இருவருமே நடிகைகள்; இருவருமே பிராமணர்கள்; ஜெயலலிதா கொள்கை பரப்பு செயலாளராக எம்ஜிஆருக்கு நெருக்கமாக இருந்தார், த்ரிஷா விஜய்க்கு நெருக்கமாக இருக்கிறார்; ஜெயலலிதாவும் த்ரிஷாவும் திருமணம் செய்து கொள்ளவில்லை என மொத்தம் ஐந்து பொருத்தங்கள் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, ஜெயலலிதா முதல்வர் ஆனது போல் தானும் முதல்வராகலாம் என்று த்ரிஷா முதல்வர் கனவில் இருப்பதாக தாமோதரன் பிரகாஷ் தெரிவித்துள்ளார். முதல் கட்டமாக தமிழக வெற்றி கழகத்தின் கொள்கை பரப்பு செயலாளராக த்ரிஷா சேருவார் என்றும், அதன்பின் படிப்படியாக முதல்வர் பதவியை பிடித்து விடுவார் என்றும் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆனால், தமிழக வெற்றி கழகத்தின் தொண்டர்கள் அவருடைய கருத்தை மறுத்துள்ளனர். கட்சி தொடங்கி ஒன்றரை வருடத்திற்கு மேல் ஆகியும் இதுவரை த்ரிஷா அந்த கட்சியில் சேருவதற்கான எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை என்றும், எனவே த்ரிஷா மீதும் விஜய் மீதும் தேவையில்லாமல் வதந்தியை கிளப்ப வேண்டாம் என்றும் அவர்கள் கூறி வருகின்றனர்.
த்ரிஷாவுக்கு அரசியல் சேரும் ஆசை இருந்திருந்தால், விஜய் கட்சி தொடங்கும்போதே அந்த கட்சியில் சேர்ந்திருக்கலாம் அல்லது ஒரு வருடம் கழித்து சேர்ந்திருக்கலாம் என்றும், அவர் முழுக்க முழுக்க சினிமாவில் கவனம் செலுத்தி வரும் நிலையில் தேவையில்லாமல் வதந்தியை கிளப்ப வேண்டாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவையும் நடிகை த்ரிஷாவையும் சம்பந்தப்படுத்தி பேசியது தேவையற்றது என்றும், யூடியூபில் பேட்டி கேட்டால் என்ன வேண்டுமானாலும் பேசிவிடலாம் என்பது கருத்து சுதந்திரத்தில் வராது என்றும், தனிப்பட்ட முறையில் ஒருவர் இன்னும் அரசியலுக்கே வராத போது அவரைப் பற்றி அவதூறாக பேசுவது தவறானது என்றும் த்ரிஷா ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.