இன்று இரவு முழுவதும் மழையா? 27 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுத்த இந்திய வானிலை ஆய்வு மையம்..!

Published:

இன்று இரவு தமிழகத்தில் உள்ள 27 மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நாளை முதல் அக்னி நட்சத்திரம் தொடங்க இருக்கும் நிலையில் வெப்பம் மிக அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கோடை மழை நாளையும் தொடரும் என்று கூறப்படுகிறது.

அந்த வகையில் இன்று இரவு தமிழகத்தில் உள்ள வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், சேலம், தர்மபுரி, நாமக்கல், கரூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, புதுகோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி மற்றும் மயிலாடுதுறை ஆகிய 27 மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதுமட்டுமின்றி புதுவை காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யும் என்று கூறப்படுகிறது.

TN Rainsஒவ்வொரு ஆண்டும் மே மாதம் அக்னி நட்சத்திர வெயில் மக்களை வாட்டி வதைக்கும் நிலையில் இந்த ஆண்டு நல்லவேளையாக கோடை மழை பெய்து வருவது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதுமட்டுமின்றி மே 7ஆம் தேதி வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு ஏற்படும் என்று அதன் பிறகு அது தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று புயலாக மாறும் வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.

எனவே இன்னும் ஒரு சில நாட்களுக்கு அக்னி நட்சத்திரத்தின் தாக்கம் இருக்காது என்றும் அவ்வப்போது மழை பெய்து குளிர்ச்சியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மே மாதத்தில் புயல் வருவது என்பது மிகவும் அரிதான செயல் என்பதால் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

மேலும் உங்களுக்காக...