சிஎஸ்கே-லக்னோ போட்டி ரத்து: பிரித்து கொடுக்கப்பட்ட புள்ளிகள்..!

ஐபிஎல் தொடரில் இன்று சென்னை மற்றும் லக்னோ அணிகளுக்கிடையிலான போட்டி நடைபெற்ற நிலையில் இந்த போட்டி மழையால் பாதிக்கப்பட்டதால் போட்டி ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. மேலும் இரு அணிகளுக்கும் தல ஒரு புள்ளி பிரித்து அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை மற்றும் லக்னோ அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று லக்னோ மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் டாஸ் என்ற சென்னை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில் 19.2 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்கள் லக்னோ அணி எடுத்த போது மழை குறுக்கிட்டதால் போட்டியில் நிறுத்தப்பட்டது இதனை அடுத்து மழி தொடர்ந்து பெய்து வந்ததால் போட்டி கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டு இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது

csk vs lsgvvvvvvv1இதனை அடுத்து லக்னோ மற்றும் சென்னை அணிகள் தல பதினோரு புள்ளிகள் உடன் இரண்டாவது மற்றும் மூன்றாவது  இடங்களை பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பந்து வீச்சாளர்கள் மிகவும் சூப்பராக பந்து வீசினார் என்பதும் குறிப்பாக மொயின் அலி, தீக்ஷனா மற்றும் பகிரனா ஆகிய மூவரும் தலா இரண்டு விக்கெட்டுகளையும் ஜடேஜா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

லக்னோ அணியில் ஆயுஷ் பதானி தவற வேறு யாரும் சரியாக ரன்கள் எடுக்கவில்லை என்பதும் அவர் மட்டுமே 59 ரன்கள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மிக எளிதில் வெற்றி பெறும் வாய்ப்பு இருந்தும் மழை குறிப்பிட்டதால் சென்னை அணி ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.