குடும்பத்திற்காக தன்னலமின்றி பாடுபடும் தந்தையர்களை போற்றும் தந்தையர் தினம், இந்த ஆண்டு ஜூன் 15 அன்று கொண்டாடப்பட்டது. சமூக வலைத்தளங்கள் முழுவதும் அன்பும், பாசமும் நிறைந்த பதிவுகளால் நிரம்பியிருக்க, ஓர் இன்ஸ்டாகிராம் வீடியோ அனைவரையும் அதிர்ச்சியிலும் ஆழ்ந்த கவலையிலும் ஆழ்த்தி, தனித்து நின்றது.
அந்த வீடியோவில், ஒரு மகள் தனது தந்தைக்கு சாதாரணமாக பேப்பரால் சுற்றப்பட்ட ஒரு பெட்டியை கொடுக்கிறாள். அதில், “ஹேப்பி ஃபாதர்ஸ் டே அப்பா” என்றும், “என் சர்ப்ரைஸ் உங்களுக்கு எப்படிப் பிடித்திருக்கிறது?” என்றும் எழுதியிருந்தாள். பெட்டியின் பின்புறம் தீக்குச்சி ஒட்டப்பட்டிருக்க, மகள் அதனைப் பற்றவைத்து “பெரிய சஸ்பென்ஸ்’ என்று கூற, பேப்பர் எரியத் தொடங்கியது.
உள்ளே ஏதோ நெகிழ்ச்சியான பரிசு இருக்கும் என்று அனைவரும் எதிர்பார்த்திருக்க, காகிதம் எரிந்து முடிந்ததும் அதிர்ச்சி காத்திருந்தது. பெட்டிக்குள் இருந்தது ஒரு சிகரெட், ஒரு பான் மசாலா பாக்கெட், மற்றும் குட்கா பவுச்சுகள் மட்டுமே! தனது அப்பா இவற்றை விரும்பி பயன்படுத்துகிறார் என்று அந்த சிறுமி அப்பாவியாக நினைத்து இதை பரிசளித்ததாக சிலரும், தனது அப்பா இந்த கெட்ட பழக்கத்தை விட வேண்டும் என்ற நோக்கத்தில் அந்த சிறுமி அனுப்பியிருக்கலாம் என்று சிலரும் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
இந்த வீடியோ வெளியான சில தினங்களிலேயே ஒரு கோடியே இருபது லட்சத்துக்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டு வைரலானது. “உங்கள் மகள் இப்படி ஒரு பரிசை கொடுத்தது வருத்தம், தனியாக அமர்ந்து சிந்தியுங்கள்,” என்றும், “இத்தகைய பரிசை குழந்தைகள் கொடுத்தால் தந்தைக்கு வெட்கப்பட வேண்டும்,” என்றும் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். “இந்த பரிசுக்கு பிறகு அவர் இதுபோன்ற பொருட்களை நிறுத்துவார் என நம்புகிறேன்” என்ற கருத்தும் பதிவாகியுள்ளது.
“குழந்தைகள் எல்லாவற்றையும் கவனிப்பார்கள், அவர்களின் அப்பாவியான செயல்கள் வார்த்தைகளை விட வலுவாகப் பேசும்” என்பதை இந்த வீடியோ உணர்த்துகிறது.
தந்தையர் தினத்தில் மகள் பரிசாக கொடுத்த ஒரே ஒரு தீக்குச்சி அவரதுஅப்பாவின் இதயம் நெகிழ்ச்சியால் பத்திக்கிச்சு, இனிமேல் அவைகளை அந்த நபர் தொடக்கூட மாட்டார் என நம்புவோம் என இன்னொருவர் பதிவு செய்திருந்தார்.
https://www.instagram.com/reel/DK7dGGSIm30/?utm_source=ig_web_copy_link