ஒரு லிட்டர் வாட்டர் பாட்டில் விலை ரூ.45 லட்சம்.. தங்கத்துகள் கலந்துள்ளதாக தகவல்..!

By Bala Siva

Published:

அக்குவா நிறுவனம் ஒரு லிட்டர் வாட்டர் பாட்டில் விலை ரூபாய் 45 லட்சம் என விற்பனை செய்யும் நிலையில் அந்த தண்ணீரில் தங்க துகள்கள் கலந்து உள்ளதாக கூறப்படுகிறது.
பொதுவாக ஒரு லிட்டர் வாட்டர் பாட்டில் 20 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை விற்கப்படுகிறது என்பதை தான் நாம் கேள்வி பட்டிருக்கின்றோம். ஆனால் அமெரிக்காவில் உள்ள அக்குவா என்ற நிறுவனம் வெளியிட்டுள்ள வாட்டர் பாட்டில் விலை ரூபாய் 45 லட்சம் என்று கூறப்படுகிறது.

இந்த வாட்டர் பாட்டில் உள்ள தண்ணீர் 3 கண்டத்திலிருந்து வருவதாகவும் பிரான்சில் உள்ள ஒரு நீரூற்றில் இருந்து ஒரு பகுதியும் பிஜி தீவில் உள்ள நீரூற்றிலிருந்து ஒரு பகுதியும் ஐஸ்லாந்து நாட்டில் உரை பனிகளை உருக்கி எடுத்த தண்ணீரும் கலந்து வழங்கப்படுகிறது என்றும் கூறப்படுகிறது

அது மட்டும் இன்றி ஒவ்வொரு வாட்டர் பாட்டிலிலும் ஐந்து கிராம் 24 கேரட் தங்கம் சேர்க்கப்பட்டுள்ளது என்றும் அதனால் தண்ணீர் அதிக காரத்தன்மையுடனும் ஆரோக்கியமாகவும் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த வாட்டர் பாட்டிலின் விலை ரூபாய் 45 லட்சம் என்பதை கின்னஸ் புத்தகத்திலும் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஜப்பானில் உள்ள ஒரு வாட்டர் பாட்டில் நிறுவனம் ஒரு லிட்டர் வாட்டர் பாட்டில் ரூ.44,000 க்கு விற்பனை செய்கிறது. இந்த தண்ணீர் பல ஆயிரம் அடிக்கு கீழே இருந்து பிரித்து எடுக்கப்படுகிறது என்றும் அதில் சில முக்கிய தாதுக்கள் இருப்பதால் இந்த தண்ணீரை குடிப்பவர்கள் பளபளப்புடனும் ஆற்றல் உள்ளவர்களாக இருப்பார்கள் என்றும் கூறப்படுகிறது. ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டில் 44 ரூபாய் மற்றும் 45 லட்சம் என விற்பனை செய்யப்படுவது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது