லீவ் எடுத்து வெளிநாடு டூர் சென்றவருக்கு ரூ.73 லட்சம் அபராதம் விதித்த நிறுவனம்..!

By Bala Siva

Published:

சீனாவில் உள்ள முன்னணி நிறுவனத்தில் பணிபுரியும் ஒருவர் விடுமுறை எடுத்துக் கொண்டு வெளிநாடு சுற்றுலா சென்ற நிலையில் அந்த ஊழியருக்கு அவரது நிறுவனம் 73 லட்சம் அபராதம் விதித்துள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சீனாவில் உள்ள முன்னணி தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்யும் ஒரு நபர் வெளிநாடு செல்வதற்காக நிறுவனத்தில் விடுமுறை கேட்டு உள்ளார். ஆனால் அவருக்கு மேலாளர் விடுமுறை தர மறுத்துள்ளார். ஏற்கனவே தனது மனைவி மற்றும் குடும்பத்துடன் வெளிநாடு செல்ல திட்டமிட்டு டிக்கெட் வாங்கியுள்ள நிலையில், விடுமுறை தர மறுத்து விட்டதால் அதிர்ச்சியாக இருந்தார்.

இதனை அடுத்து அவர் மருத்துவரிடம் போலியான சான்றிதழ் வாங்கி தான் நோய்வாய் பட்டு இருப்பதாகவும் சிகிச்சைக்காக விடுமுறை வேண்டும் என்றும் கேட்டு உள்ளார். இதனை அடுத்து அவருக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தனது மனைவி குழந்தையுடன் வெளிநாடு செல்வதற்காக அவர் விமான நிலையத்தில் வந்த போது அவரது சக ஊழியர் ஒருவர் அவரை பற்றி மேனேஜரிடம் கூறியுள்ளார்.

இதனை அடுத்து நோய்வாய்ப்பட்ட விடுமுறை எடுத்து விட்டு வெளிநாடு சுற்றுலா சென்ற அந்த ஊழியரை வேலைநீக்கம் செய்த மேலாளர் நஷ்ட ஈடாக 73 லட்சம் தர வேண்டும் என்றும் வழக்கு தொடர்ந்தார் இந்த வழக்கில் நிறுவனத்தின் சார்பில் தீர்ப்பு வந்ததை அடுத்து 73 லட்சம் நஷ்டஈடு தரவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

மாதம் இரண்டு லட்சத்துக்கு மேல சம்பளம் கிடைக்கும் வேலையையும் இழந்ததோடு லட்சக்கணக்கில் நஷ்ட ஈடும் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி போலியாக மருத்துவ சான்றிதழ் கொடுத்த மருத்துவர் மீதும் நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் சீனாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் உங்களுக்காக...