இந்தியாவில் அறிமுகமாகும் Tecno Pova 4ஜி ஸ்மார்ட்போன். விலை இவ்வளவு தானா?

Published:

உலக அளவில் இந்தியாவின் ஸ்மார்ட்போன் சந்தை என்பது மிகப்பெரியது என்பதால் உலகின் அனைத்து முன்னணி ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்களும் இந்திய சந்தையை குறிவைத்து வருகின்றன என்பதும் இந்தியர்களின் விருப்பத்திற்கு இணங்க பல மாடல்கள் தயார் செய்யப்பட்டு வருகின்றன என்பதையும் பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் தற்போது Tecno Pova என்ற நிறுவனம் இந்தியாவில் வரும் ஜூலை மாதம் புதிய மாடல் ஸ்மார்ட்போன் ஒன்றை அறிமுகப்படுத்தவுள்ள நிலையில் அந்த போனின் சிறப்பு அம்சங்கள் விலை குறித்து தற்போது பார்ப்போம்.

Tecno Pova 5 4G ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை ரூ.15,990 என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MediaTek Helio G99 பிராஸசர் மூலம் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படும் இந்த மாடலில் 8GB ரேம் மற்றும் 128GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. மேலும் 120Hz அம்சத்துடன் 6.83-இன்ச் FHD+ டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tecno Pova 5 4G ஸ்மார்ட்போன் 50MP டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு மற்றும் 16MP செல்பி கேமராவைக் கொண்டிருக்கும் என்றும், இந்த போனில் 18W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5000mAh பேட்டரி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tecno Pova 5 4G ஸ்மார்ட்போனி முக்கிய அம்சங்களை சுருக்கமாக பார்ப்போம்.

* 6.83-இன்ச் FHD+ (1080 x 2460 பிக்சல்கள்) 120Hz டிஸ்ப்ளே
* MediaTek Helio G99 பிராஸசர்
* 8 ஜிபி ரேம்
* 128 ஜிபி இண்டர்னல் ஸ்டோரேஜ்
* 50MP + 2MP + AI கேமிரா
* 16MP செல்பி கேமிரா
* 18W பாஸ்ட் சார்ஜிங் உடன் 5000mAh பேட்டரி
* ஆண்ட்ராய்டு 11 OS

Tecno Pova 5 4G இந்தியாவில் ஜூலை 2023 இல் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சரியான வெளியீட்டு தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் உங்களுக்காக...