நடிகை தமன்னா ஒரு ஸ்டைல் ஐகான் என்பதை மீண்டும் ஒருமுறை தனது சமீபத்திய தோற்றத்தின் மூலம் நிரூபித்துள்ளார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்ட புகைப்படங்கள், கவர்ச்சி மற்றும் தன்னம்பிக்கை நிறைந்த புதிய ஸ்டைலை காட்டுவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த தோற்றம், தமன்னாவின் தனிப்பட்ட பாணியை மீண்டும் ஒருமுறை உலகிற்கு உணர்த்தியுள்ளது.
அந்த புகைப்படத்தில், தமன்னா கருப்பு நிற ‘ஆஃப்-ஒயிட்’ க்ராப் டாப்பை அணிந்திருந்தார். லேசான நியான் பச்சை நிறத்தில் இருக்கும் அவரது ஆடைக்கு ஒரு பொலிவை கொடுத்தது. ஒரு ஹை-ஆக்டேன் மேடை நிகழ்ச்சியில் இருந்து நேராக வந்ததை போல் தோன்றும், மின்னும் சீக்வின்ஸ் ஸ்கர்ட்டை அவர் அணிந்திருந்தார். இந்த உடை பார்ப்பவர்களைப் பிரமிக்க வைத்தது.
இந்த தோற்றத்திற்கு மேலும் மெருகூட்டும் வகையில் தமன்னா தோளில் சாதாரணமாக போட்டிருந்த வெள்ளை நிற கோடு போட்ட சட்டைதான். இது, உடையின் ஒளிரும் தன்மையை குறைத்து, ஒரு ரிலாக்ஸான மற்றும் அதே சமயம் நேர்த்தியான தோற்றத்தை கொடுத்தது. காற்றோட்டமான இந்த மேல் சட்டை அவரது ஸ்டைலுக்கு ஒரு கூடுதல் கவர்ச்சியை கொடுத்தது.
“பிரகாசத்தில் சக்தி உள்ளது, அதை அணியும் பெண்களிடமும் உள்ளது 💪🏼” என்ற அவரது இன்ஸ்டாகிராம் கேப்ஷன், இந்த தோற்றத்திற்கு சரியாக பொருந்தியது. அணிகலன்கள் எளிமையாகவும், கவனமாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தன. பெரிய ஸ்டேட்மென்ட் மோதிரங்களும், ஒரு நேர்த்தியான வைர நெக்லஸும் சரியான அளவு பிரகாசத்தை கொடுத்தன. தமன்னாவின் மேக்கப் சுத்தமாகவும், பளபளப்பாகவும் இருந்தது, இது நவீன கவர்ச்சியில் இது ஒரு மாஸ்டர் கிளாஸ். அவரது இந்த லுக், ஃபேஷன் உலகில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளது.
நடிகை தமன்னாவின் தந்தை ஒரு வைர வியாபாரி என்று கூறப்படும் நிலையில், அவரது மகள் உடையிலும் சரி, தோற்றத்திலும் சரி வைரமாக மின்னுவதில் எந்தவித ஆச்சரியமும் இல்லை..!