ஸ்விக்கி ஆரம்பித்த முதல் நாள் எத்தனை ஆர்டர் தெரியுமா? சி.இ.ஓ வெளியிட்ட ஆச்சரிய தகவல்..!

Published:

இந்தியாவின் முன்னணி உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விக்கி ஆரம்பித்து பத்து ஆண்டுகள் முடிந்துவிட்ட நிலையில் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த இந்நிறுவனத்தின் சிஇஓ நாங்கள் இந்த நிறுவனத்தை ஆரம்பித்த முதல் நாளில் ஒரு ஆர்டர் கூட கிடைக்கவில்லை என்று கூறி இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2014 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தான் ஸ்விக்கி நிறுவனத்தை தொடங்கினோம் என்றும் ஆன்லைனில் எங்கள் செயலியை அறிமுகம் செய்த நிலையில் முதல் நாளில் ஒரு ஆர்டர் கூட கிடைக்கவில்லை, ஆனால் இரண்டாவது நாளில் இரண்டு ஆர்டர்கள் கிடைத்தது என்று தெரிவித்தார்.

இந்த பத்து ஆண்டுகளில் எங்கள் நிறுவனம் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ளது என்றும் படிப்படியாக ஆர்டர்கள் அதிகரித்து இன்று மூன்று லட்சம் ஹோட்டல்களுடன் எங்களுக்கு தொடர்பு இருக்கிறது என்றும் லட்சக்கணக்கில் ஆர்டர்கள் குவிந்து வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

இன்று இந்தியாவின் முன்னணி ஆன்லைன் டெலிவரி நிறுவனமாக நிறுவனமாக ஸ்விக்கி  உள்ளது என்றும் எங்கள் போட்டியாளர்களை பற்றி எங்களுக்கு கவலை இல்லை, எங்கள் நிறுவனத்தின் வளர்ச்சியை மட்டுமே நாங்கள் கவனித்து வருகிறோம் என்றும் இந்நிறுவனத்தின் சிஇஓ ஸ்ரீ ஹர்ஷா என்பவர் தெரிவித்துள்ளார்.

எந்த ஒரு தொழில் ஆரம்பித்தாலும் ஆரம்பத்தில் சவாலாகத்தான் இருக்கும் என்றும் ஆனால் அந்த சவாலை சமாளித்து விட்டால் அதன் பிறகு முழுக்க முழுக்க ஏற்றம் தான் கிடைக்கும் என்றும் இது புதிய ஸ்டார்ட் அப் தொழில் அதிபர்களுக்கு ஒரு ஊக்கமாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.

மேலும் உங்களுக்காக...