உலகில் ஆண்கள் இனம் என்று இல்லாமல் இருந்தால் எப்படி இருக்கும்? கற்பனையிலும் நினைத்துக் கூட பார்க்க முடியாது அல்லவா? ஆனால் இந்தக் கூற்று கற்பனை அல்ல. நிஜமாகி வருகிறது என்ற அதிர்ச்சித் தகவலைத் தந்திருக்கிறார்கள். இனி ஆண் குழந்தை வேண்டும் என்று தவமாய் தவமிருப்பவர்களுக்கு இந்தச் செய்தி ஷாக் கொடுத்துள்ளது.
மனிதனின் மரபணுவில் x மற்றும் y குரோமோசோம்கள் உள்ளன. இந்த குரோமோசோம்கள்தான் மனித இனத்தின் பாலினத்தை நிர்ணயிக்கின்றன. ஆணின் விந்தனுவும், பெண்ணின் அண்ட அணுவும் இணையும் போதும் ஏற்படும் மரபியல் மாற்றங்களால் கருவின் பாலினம் நிர்ணயிக்கப்படுகிறது. தற்போது இதில் தான் சில மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது. ஆனால் அது இப்போது தாக்கத்தினை ஏற்படுத்தாது. இந்த மாற்றங்கள் நிகழ இன்னும் 100 லட்சம் ஆண்டுகள் ஆகலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கின்றனர்.
அதாவது, ஆணின் விந்தணுவில் இருக்கும் y குரோமோசோம்கள் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருகிறது. இந்த ஒய் குரோமோசோம்கள் தான் ஆண் குழந்தைகள் பிறப்பதற்குக் காரணமாக இருக்கிறது. அந்த வகையில் இந்த ஒய் குரோமோசோம்களின் அழிவின் காரணமாக தொடர்ச்சியாக ஆண் குழந்தைகள் பிறப்பு விகிதம் படிப்படியாகக் குறையும்.
ஸ்விக்கி ஆரம்பித்த முதல் நாள் எத்தனை ஆர்டர் தெரியுமா? சி.இ.ஓ வெளியிட்ட ஆச்சரிய தகவல்..!
மேலும் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் அதிரிகத்து ஒரு கட்டத்தில் ஆண் குழந்தைகள் பிறப்பதே நின்று விடும். ஆனால் இந்த ஆய்வு உண்மைதானா என்று கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் மரபியல் பேராசிரியர் டேவிட் பேஜி ஆய்வு மேற்கொண்ட போது அது ஒட்டு மொத்த ஆண் இனத்துக்கான குரோமோசோம்களைப் பாதிக்காது. சில குடும்பங்களின் வழிவழியாக மட்டுமே இந்த மாற்றங்கள் நிகழும். இத்தகைய மாற்றங்களால் மனித குலத்திற்கு துளியளவும் பாதிப்பில்லை என்றும் அவர் தனது கட்டுரையில் தெரிவித்திருக்கிறார்.
ஏற்கனவே மதுப்பழக்கம், மன அழுத்தம், உடல் எடை கூடுதல் ஆகியவற்றால் ஆண்களுக்கு ஆண்மைக் குறைவு ஏற்பட்டு வரும் வேளையில் தற்போது இந்தத் தகவலும் அவர்களைத் திடுக்கிட வைத்துள்ளது.