tirupati darshan | திருப்பதியில் கூட்டமே இல்லாம் எளிதாக பார்க்க சூப்பர் சான்ஸ்.. தரிசன முறையில் மாற்றம்

Published:

திருப்பதி: tirupati darshan | சந்திரபாபு நாயுடு முதல்வராக பொறுப்பேற்ற பிறகு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் புதிய முயற்சி செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய முறை காரணமாக பக்தர்கள் ஈஸியாக தரிசனம் செய்ய முடியும்.

உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு நாள்தோறும் பல ஆயிரம் பக்தர்கள் வந்து செல்கிறார்கள். திருப்பதி திருமலையில் உள்ள ஏழுமலையானை தரிசனம் செய்ய 300 ரூபாய் தரிசன டிக்கெட்டுகளை வாங்கியவர்கள் மட்டுமே வேகமாக தரிசனம் செய்ய முடியும். அதற்கே 3 மணி நேரம் முதல் 6 மணி நேரம் வரை ஆகிறது. நாள் தோறும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்படும் காரணத்தால், சாமி தரிசனம் செய்து நீண்ட நேரம் ஆகிறது. தர்ம தரிசனத்தில் திருப்பதி ஏழுமலையான தரிசனம் செய்ய விரும்பினால், பல மணி நேரம் காத்திருக்க வேண்டும். கூட்டம் மிக அதிகமாக இருக்கும் நாட்களில் பாலாஜியை பார்க்க 24 மணி நேரத்திற்கு மேல் கூட ஆகும்.

இந்த சூழலில் சமீப காலத்தில் வாரவிடுமுறை நாட்களை தவிர மற்றநாட்களில் வழக்கமான கூட்டத்தைவிட கொஞ்சம் கூட்டம் குறைந்துள்ளது. இதையடுத்து திருப்பதியில் பக்தர்களின் வருகையை அதிகரிக்க தரிசன நேரத்தை குறைக்க முடிவு செய்துள்ளார்கள். அதாவது இனி ரூ.300 சிறப்பு நுழைவு சீட்டு மூலம் பக்தர்கள் 2 முதல் 3 மணி நேரத்திற்குள்ளேயே தரிசனம் செய்ய முடியும். 2மணி நேரத்திற்கு உள்ளாகவே தரிசனம் செய்யும் வாய்ப்பு உள்ளதாகவும் திருமலை வட்டாரங்கள் சொல்கின்றன.

ஆந்திர முதல்வராக தெலுங்குதேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு முதல்வராக பொறுப்பேற்ற பின்னர் திருப்பதியில் பல்வேறு மாற்றங்கள் நடந்து வருகின்றன. ஐஏஎஸ் அதிகாரி ஷியாமளா ராவ் திருப்பதி திருமலை தேவஸ்தானத்தின் இஓவாக (தலைமை அதிகாரி) நியமிக்கப்பட்டார். இதன் பின்னர், திருமலையில் தொடர்ந்து சோதனை முயற்சிகள் நடந்து வருகிறது. இதன்படிதான் 300 ரூபாய் டிக்கெட்டில் தரிசனம் செய்வதை எளிமைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அதேபோல் படிகள் வழியாக பாதயாத்திரையாக நடந்து வருவோரும், வனவிலங்குகளால் எந்த தொந்தரவும் இல்லாமல் இருக்கவும் தேவஸ்தானம் அதிரடி திட்டத்தை செயல்படுத்தி உள்ளது. திருமலையில் இனி பக்தர்கள் மகிழ்ச்சியாக தரிசனம் செய்ய முடியும்.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வழக்கமான நாட்களை விட வாரவிடுமுறை நாட்கள், பண்டிகை நாட்களில் அதிகளவு பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள். ஞாயிற்றுக்கிழமையான நேற்று 78,912 பக்தர்கள் தரிசனம் செய்துள்ளார்கள். 32,039 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தி உள்ளார்கள் பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கையாக ரூ.3.83 கோடியை ப செலுத்தியுள்ளனர்.

தொடர்ந்து இன்று காலை நிலவரப்படி வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள 23 அறைகளில் பக்தர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளார்காளம். இவர்கள் சுமார் 10 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். ரூ.300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் 3 மணி நேரத்தில் தரிசனம் செய்துவருவதாக திருமலை வட்டாரங்கள் சொல்கின்றன.

 

 

மேலும் உங்களுக்காக...