நடிகர் நெப்போலியன் மகன் தனுஷ் வெளியிட்ட நிச்சயதார்த்த புகைப்படத்தை கவனித்தீர்களா.. குவியும் வாழ்த்து

சென்னை: நடிகர் நெப்போலியனின் மகன் தனுஷ் தன்னுடைய நிச்சயதார்த்த புகைப்படங்கள் என்று கூறி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட வீடியோவை கவனித்தீர்களா? அதை பார்த்த பல பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள். நாமும் வாழ்த்துக்கள் தெரிவிப்போம்.

நடிகர் நெப்போலியன் என்றாலே பலருக்கும் பாண்டிலே, சீவலப்பேரி பாண்டி என்பது தான் நியாபகம் வரும்.. அதன்பிறகு எட்டுப்பட்டி ராசா படமும் நியாபகம் வரும் பல படங்களில் வில்லனாகவும் ஹீரோவாகவும் நடித்துள்ள நெப்போலியன், ஒரு காலக்கட்டத்தில் குணச்சித்திர வேடங்களிலும் நடித்தார். நடிகர் விஜய் நடித்த போக்கிரி படத்தில் குணச்சித்திர வேடத்தில் நடித்திருப்பார். ஒரு கட்டத்தில் சினிமாவில் இருந்து ஒதுங்கி அரசியலில் இறங்கினார். எம்பியாகி மத்திய அமைச்சராகவும் இருந்தார். அதன்பினனர் மகனுக்காக சினிமா அரசியல் என இரண்டையும் விட்டு விட்டு அமெரிக்காவிற்கு சென்று குடும்பத்தோடு செட்டில் ஆகி விட்டார்.

நெப்போலியன் ஜேயசுதா என்பவரை திருமணம் செய்திருந்தார். அவருக்கு தனுஷ் மற்றும் குணால் என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள் இதில் மூத்த மகன் தனுஷ்க்கு நான்கு வயதிலேயே தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். அவருக்கு அவர் போகாத மருத்துவமனையே இல்லை.. திருநெல்வேலி பக்கத்தில் உள்ள ஊரில் பாரம்பரிய முறையில் இதற்கு மருத்துவம் பார்ப்பது தெரியவர அங்கு தன்னுடைய மகனை கூட்டி சென்றார்..

பிறகு  அவரது மகனின் உடல்நிலையில் சில மாற்றங்கள் தெரிய தொடங்கியதும் தன்  மகனின் நிலைமை இனி எந்த குழந்தைகளுக்கும் வரக்கூடாது என்பதற்காக அந்த ஊரிலேயே ஒரு பெரிய மருத்துவமனையை நெப்போலியன் கட்டி உள்ளார். அங்கும் இன்றும் அந்த மருத்துவமனை சிறப்பாக செயல்படுகிறது.

ஒரு கட்டத்தில் அமெரிக்கா சென்ற போது, அவரது மகனுக்கு அங்குள்ள சூழல் பிடித்து போனது. தன்னை யாரும் பார்த்து பரிதாபம் கொள்ளாத நிலையை கண்டு நெகிழ்ந்த அவர், அங்கேயே இருக்க விரும்பியுள்ளார். இதையடுத்து மகனுக்காக நெப்போலியன் அங்கேயே போய் செட்டில் ஆனார். நடிகர் நெப்போலியன் அமெரிக்காவில் பிசினஸ் செய்து வருகிறார். அதோடு விவசாயத்தையும் செய்து வருகிறார்.

இந்த நிலையில் நெப்போலியனின் மகனின் நிச்சயதார்த்தத்திற்காக சில தினங்களுக்கு முன்பு அவர் சென்னையில் நேரடியாக முதலமைச்சர் மு க ஸ்டாலினை சந்தித்து அவருக்கு நிச்சயதார்த்த பத்திரிக்கையை கொடுத்துள்ளார். அதுபோல தன்னுடைய மகன் அக்ஷயா என்ற பெண்ணை திருமணம் செய்ய போகிறார் என்ற மகிழ்ச்சி செய்தியை தெரிவித்தார்.

இந்த நிலையில் நெப்போலியன் மூத்த மகன் தனுஷ் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் தன்னுடைய நிச்சயதார்த்த புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். அதில் தன்னுடைய வருங்கால மனைவியோடு தான் இருக்கும் புகைப்படங்களை தனுஷ் பதிவிடவில்லை. தன்னுடைய தம்பி குணா மற்றும் தன்னுடைய அம்மா உடன் இருக்கும் புகைப்படங்களை மட்டும் வெளியிட்டள்ளார்.

அந்த பதவில் “வெளியில் அழகான தோற்றம் வாழ்க்கையை மாற்றாது, உள்ளே நன்றாக உணரும் வாழ்க்கையை உருவாக்குங்கள்… எனக்கு நிச்சயதார்த்தம்! ” என்று கேப்ஷன் கொடுத்திருக்கிறார். இதற்கு பல பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

அதுபோல யூடியூபராகவும் குக் வித் கோமாளி சீசன் 5 போட்டியாளராகவும் இருக்கும் இர்ஃபான் வாழ்த்துக்கள் தெரிவித்திருக்கிறார். இர்ஃபான் அடிக்கடி நெப்போலியன் வீட்டிற்கு சென்று அவருடைய குடும்பத்தோடு வீடியோக்களை வெளியிட்டு வந்துள்ளார். அத்துடன் ரசிகர்களும் தனுஷுக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அதிலும் அதிகமானோர் தனுஷ் அவருடைய வருங்கால மனைவியின் புகைப்படத்தை வெளியிட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.