கெடுவான் கேடு நினைப்பான்.. பாகிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதல்.. 4 மாணவிகள் உயிரிழப்பு..!

  தென்மேற்கு பாகிஸ்தானில் உள்ள ஒரு பள்ளி பேருந்தை தற்கொலை கார் வெடிகுண்டு தாக்குதல் ஒன்று தாக்கியது. இதில் குறைந்தபட்சம் 4 பள்ளி குழந்தைகள் உயிரிழந்ததாகவும், 38 பேர் காயமடைந்துள்ளதாகவும் ஒரு அரசு அதிகாரி…

suicide bomb

 

தென்மேற்கு பாகிஸ்தானில் உள்ள ஒரு பள்ளி பேருந்தை தற்கொலை கார் வெடிகுண்டு தாக்குதல் ஒன்று தாக்கியது. இதில் குறைந்தபட்சம் 4 பள்ளி குழந்தைகள் உயிரிழந்ததாகவும், 38 பேர் காயமடைந்துள்ளதாகவும் ஒரு அரசு அதிகாரி தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதல், பிரிவினைக்காக நீண்டகால போராட்டத்தை நடத்தி வரும் பலூசிஸ்தான் மாகாணத்தில் நிகழ்ந்த சம்பவமாகும். இந்த மாகாணத்தில், 2019 இல் அமெரிக்காவால் தீவிரவாத அமைப்பாக பிரகடனப்படுத்தப்பட்ட பலூசிஸ்தான் விடுதலை இராணுவம் உள்ளிட்ட பிரிவினைவாத குழுக்களின் தாக்குதல்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

இந்த தற்கொலை வெடிகுண்டு தாக்குதல் குஸ்தார் மாவட்டத்தில் நடைபெற்றதாகவும், அந்த பேருந்து, ஒரு இராணுவக் கட்டுப்பாட்டிலுள்ள பள்ளிக்கு குழந்தைகளை அழைத்து சென்றபோது வெடிகுண்டு தாக்குதல் நிகழ்ந்ததாகவும் மாவட்ட துணை ஆணையாளர் யாசிர் இக்பால் கூறியுள்ளார். தற்போதுவரை எந்த அமைப்பும் இந்த தாக்குதலுக்குப் பொறுப்பேற்கவில்லை.

இருப்பினும், இந்த பகுதியில் பாதுகாப்பு படைகள் மற்றும் பொதுமக்களை அடிக்கடி இலக்காக்கும் பலூச் பிரிவினைவாதிகளின் மீது சந்தேகம் குவிந்து வருகிறது.

இந்த தாக்குதலை பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி கடுமையாக கண்டித்து, குழந்தைகளின் உயிரிழப்பில் ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துள்ளார். தாக்குதல் செய்தவர்களை “மிருகங்கள்” எனக் கண்டித்து, அவர்களுக்கு எந்த விதமான இரக்கம் காட்டும் மனமுமில்லை எனக் கூறியுள்ளார். “தீவிரவாதிகள் வெறும் குழந்தைகளை இலக்காக்கி பயங்கரமான கொடூரத்தைச் செய்துள்ளனர்” என அவர் தெரிவித்தார்.

தீவிரவாதிகளுக்கு ஆதரவு கொடுத்து அவர்களுக்கு பணமும் இடமும் கொடுத்து வளர்த்து விட்டால் ஒரு காலத்தில் அவர்கள் உதவி செய்தவர்களையே தாக்குவார்கள் என்பது உலகில் பல எடுத்துக்காட்டுகள் உள்ளன. அந்த வகையில் தற்போது தீவிரவாதிகளுக்கு ஆதரவளித்ஹ்டு இந்தியாவை தாக்க பாகிஸ்தான் உதவி செய்த நிலையில் தற்போது அதேபோன்ற ஒரு தீவிரவாதிகள் அமைப்பு பாகிஸ்தானுக்கு சிம்ம சொப்பனமாக இருப்பது ’கெடுவான் கேடு நினைப்பான்’ என்ற பழமொழியை ஞாபகப்படுத்துவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றன