சில நேரங்களில் யானைக்கும் அடி சறுக்கும். யானை சறுக்கினால் எழுந்திருக்க நீண்ட நேரம் ஆகும். ஆனால் சறுக்கியதை கூட நொடியில் சமாளிக்கும் வித்தை குதிரைக்கு மட்டுமே உண்டு. அதுபோலவே ஷகீரா நிஜமாகவே ஒரு குதிரை என நிரூபித்துள்ளார்!
கனடாவின் க்யூபெக் மாகாணத்தில் உள்ள மாண்ட்ரியலில் நடைபெற்ற ‘Las Mujeres Ya No Lloran’ என்ற இசை நிகழ்ச்சியில் ஷகிரா கலந்து கொண்ட போது திடீஎர்ன மேடையில் விழுந்தார். ஆனாலும் அடுத்த நொடியே சமாளித்து எழுந்து ஆடினார்.
மே 20ஆம் தேதி, தன் பிரபலமான பாடல் ‘Whenever, Wherever’ என்ற பாடலை பாடிக்கொண்டே ஷகிரா நடனமாடி கொண்டிருந்தபோது, திடீரென அவர் தடுக்கி விழுந்தார். X-இல் பகிரப்பட்ட வீடியோவில், 48 வயதான ஷகீரா முழு உற்சாகத்துடன் நடனமாடியபோது திடீரென பேலன்ஸ் இழந்து கீழே விழுந்ததை காணலாம்.
ஆனால், அடுத்த சில விநாடிகளில் நிமிர்ந்தெழுந்த ஷகீரா, சிரித்தவாறே தொடர்ந்து நிகழ்ச்சியை நடத்தினார்.
ஒரு ரசிகர் அந்த தருணத்தை வீடியோவாகப் பிடித்து இணையத்தில் பகிர்ந்ததுடன், சமூக ஊடகங்களில் ஷகீராவுக்கு ஆதரவும் பாராட்டுகளும் குவிந்து வருகின்றன.
ஒரு ரசிகர், “அவள் ஒரு ராணி என்பது போலவே, சந்தர்ப்பத்தை கைப்பற்றி தன்னம்பிக்கையுடன் மேலெழுந்தார்,” எனக் குறிப்பிட்டுள்ளார். மற்றொருவர், “விழுந்தாலும் கூட, அந்த நேரத்திலும் கம்பீரம் மாறவில்லை,” என புகழ்ந்துள்ளார்.
மற்றொரு ரசிகர், “அற்புதமாக நடனக்கலைஞர்’ என வர்ணிக்க, இன்னொருவர், “இந்த முறை கடுமையாகவே விழுந்தார், ஆனால் வழக்கம்போலவே ஒரே வீரத்துடன் மீண்டு வந்தார்,” என குறிப்பிட்டுள்ளார்.
ஒரு ரசிகர் ஷகீராவின் சொந்த பாடல்களை மேற்கோளாகக் கொண்டு, “ஒரு உண்மையான கலைஞர், எப்போதும் பெண்கள் அழுவதில்லை,” என எழுதியுள்ளார். மேலும் ஒருவர், எந்த சூழ்நிலையிலும் தன்னை கையாள தெரிந்தவர், உண்மையான கலைஞர்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
கொலம்பியா நாட்டை சேர்ந்தவர் பாடகி ஷகீரா பல்வேறு இசை ஆல்பங்களை வெளியிட்டவர். 2010 உலக கோப்பை கால்பந்து போட்டி நடந்தபோது ‘ஷாமினா மினா ஒய்., ஓய், வக்கா, வக்கா , கேய் கேய் .,திஸ் டைம் பார் ஆப்ரிக்கா’ என்ற இவரது பாடல் உலகம் முழுவதும் பெரும் புகழை பெற்று தந்தது.
https://x.com/TovalAdriana/status/1925106916037951885