சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த கூடாது.. 34 வயது பிராமண பெண்ணின் புதிய இயக்கம்..!

  18 ஆண்டுகளுக்கு முன், ஹரியானாவில் உள்ள ஒரு அரசு பொறியியல் கல்லூரியில் எலக்ட்ரானிக் இன்ஜினியரிங் பயில்வதற்கான தேர்வில் தோல்வியடைந்த அனுராதா திவாரிக்கு, அது வெறும் தேர்வுத் தோல்வி அல்ல, தன் “உயர் சாதியான…

divari

 

18 ஆண்டுகளுக்கு முன், ஹரியானாவில் உள்ள ஒரு அரசு பொறியியல் கல்லூரியில் எலக்ட்ரானிக் இன்ஜினியரிங் பயில்வதற்கான தேர்வில் தோல்வியடைந்த அனுராதா திவாரிக்கு, அது வெறும் தேர்வுத் தோல்வி அல்ல, தன் “உயர் சாதியான பிராமணர் அடையாளமே” காரணமென்று தோன்றியது.

அந்த தோல்வி தந்த வலியை அவர் இன்னும் மறக்காமல் சமூக ஊடகங்களில் எதிர்ப்பும், இடஒதுக்கீட்டை விமர்சிக்கும் எண்ணற்ற பதிவுகளும் செய்து வருகிறார். மேலும் பாஜக அரசு நாடு முழுவதும் சாதி கணக்கெடுப்பு அறிவித்ததற்கு பிறகு அவர் கொந்தளித்துள்ளார்.

34 வயதான திவாரி தன்னை போன்றே வலியை அனுபவித்த பலரை ஒன்று திரட்டுகிறார். இவர்களில் பலர், தாங்கள் பிராமணர்களாக இருப்பதில் பெருமை கொண்டவர்கள் எனக் கூறுகிறார்கள். ‘ஜெனரல் கேட்டகரி’யைச் சேர்ந்த அனைவரும் “மண்டல் கமிஷன் 2.0” காலம் ஆரம்பமாகும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர்.

பிராமணர்கள் மற்றும் பிற உயர்சாதிகளை ஒன்றிணைக்கும் வகையில் ஒரு தனிப்பட்ட அமைப்பை நான் உருவாக்கியுள்ளேன்,” எனக் கூறும் திவாரி, ஆன்லைனிலும் ஆஃப்லைனிலும் இந்த இயக்கத்தை முன்வைத்து நடத்தி வருகிறார். தொழில்முனைவோர், கல்வியாளர்கள், வலதுசாரி சிந்தனையாளர்கள் ஆகியோரிடம் தொடர்பு கொண்டு ஆதரவு திரட்டுகிறார்.

அவரது X கணக்கில் 9.8 லட்சம் பின்தொடர்பவர்கள் உள்ளனர். அதில், “பிராமணர்கள் மற்றும் மற்ற உயர் சாதி மக்கள் விழித்தெழ வேண்டும்” எனும் அழைப்புகள் அடங்கியுள்ளன.

அவரது ஒரு X பதிவில், “ஒவ்வொரு ஜெனரல் கேட்டகரி நபரும் சாதி கணக்கெடுப்பை முழுமையாக நிராகரிக்க வேண்டும். இதற்கென்று எதுவும் காரணம் சொல்ல வேண்டாம். இது உங்கள் எதிர்காலம் பற்றி. அதை பாதுகாக்கவும், பாதுகாத்திடவும்,” என எழுதியிருந்தார்.

1980களில் மண்டல் கமிஷன் அமலுக்கு வந்த பிறகு, மேல் சாதிகளை சேர்ந்தவர்கள் இந்தியாவில் பெருந்தொகையாக திரண்டனர், போராட்டங்கள் நடத்தினர், சிலர் தற்கொலைக்கு முயன்றனர். இப்போது, அதே மாதிரியான ஒரு மேல் சாதி இயக்கத்தின் ஆரம்ப அலைகளை அனுராதா திவாரி போன்றவர்கள் உருவாக்கி வருகின்றனர்.

சாதிவாரி கணக்கெடு அறிவிப்பு பாஜக தனது தேர்தல் அறிக்கையில் எப்போதும் குறிப்பிடாத ஒன்று. ஜெனரல் கேட்டகரி மக்கள் எப்போதும் பாஜகவுக்கே வாக்களித்துள்ளனர். இப்போது, அவர்களுக்கு ஏமாற்றமே ஏற்பட்டுள்ளது,” என்கிறார் திவாரி.