மன அழுத்தம் உட்பட சில தீராத நோயால் பாதிக்கப்பட்ட பெண்கள், பாடி பில்டர்களை புகைப்படமாகவோ, வீடியோவாகவோ, அல்லது நேரிலோ பார்த்தால், அவர்கள் குணமடையும் வாய்ப்பு இருப்பதாக சீனாவை சேர்ந்த மருத்துவர் ஒருவர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
“தொடர்ந்து பாடி பில்டர்கள்களின் புகைப்படங்கள், வீடியோவை அல்லது பாடிபில்டர் ஆண்களை நேரில் பாருங்கள். விசித்திரமான நகைச்சுவை உணர்வு ஏற்படும்!” என்று அவர் தனது சமூக வலைதளத்தில் அறிவுரையாக மனநலம் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு கூறியிருப்பது அதிகமாக பரிசிலிக்கப்பட்டுள்ளது.
இந்த மருத்துவர், ஒரு அரசு துறையின் மருத்துவமனையில் பணியாற்றும் ஒருவர். அவரது சமூக வலைதள பக்கத்தில் லட்சக்கணக்கான பாலோயர்கள் உள்ளனர். இவர், பெண்களின் உடல் நலத்தை பற்றிய பல அறிவுரைகளை வழங்கி வருகிறார்.
பெண்கள் மன அழுத்தத்திலிருந்து விடுபட, அடிக்கடி பாடி பில்டர்களை பார்ப்பது நல்லது. இதன் காரணமாக, உயிர்சக்தி மற்றும் ரத்தக் குறைவால் பாதிக்கப்பட்ட பெண்கள், மனநிலை சரியில்லாமல் மன அழுத்தத்திற்கு உள்ளாகும் பெண்கள், குணமடைய வாய்ப்பு உண்டு என அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு பாடி பில்டர்களைப் பார்த்தால், சில ஹார்மோன்கள் நல்ல உணர்வுகளை தூண்டும். இது மன அழுத்தத்தை குறைத்து, மன நலத்தை மேம்படுத்தும் என்றும் அவர் கூறியுள்ளார்.
“அதற்காக, பாடி பில்டர்களை நீங்கள் காதலிக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஜஸ்ட் பாருங்கள், அவர்களை ரசியுங்கள்!” என்று மட்டும் அவர் கூறியுள்ளார்.
இதன் காரணமாக, நீங்கள் ரத்த அழுத்தம் குறைவாக இருந்தால், சோர்வடைந்து பேச மனமில்லாமல் இருந்தால், தோல் உலர்ந்து இருந்தால், மயக்கம் மற்றும் தூக்கமின்மை இருந்தால் எல்லாவற்றையும் இது தீர்க்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பாடி பில்டர்களைப் பார்ப்பதன் மூலம், பெண்களுக்கு ஒரு நல்ல, அழகான அனுபவம் ஏற்படும். மூளை சிறப்பாக செயல்படும். இதனால் ம்மை மகிழ்ச்சியாக மாற்றும் என்றும் அவர் கூறியுள்ளார்.
நல்ல இயற்கை காட்சிகளைப் பார்த்தால் எப்படி மனம் அமைதியை பெறுகிறதோ, அதுபோல் பெண்கள், பலமுள்ள ஆண்களைப் பார்த்தால் மனநிலை மேம்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
“எனவே, பெண்கள் தயங்காமல் பாடி பில்டர்கள் குறித்த வீடியோக்களை ஸ்க்ரோல் செய்து, அடிக்கடி பாருங்கள். உங்கள் மன அழுத்தத்தை தளர்த்துங்கள்!” என்றும் அவர் கூறியுள்ளார்.
அவரது இந்த பதிவு, பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் கமெண்ட்களை பெற்றுக்கொண்டுள்ளது.