சினிமாவுல பத்து பேரை அடிக்கிறது மாஸ்… ஆனா பத்து அடி தெருவுல இறங்கி வேலை பாக்க விஜய்யால முடியாது.. அது திமுககாரனால மட்டும் தான் முடியும்.. யார் வேணாலும் புதுசா வரலாம்… ஆனா யார்கிட்ட போனா காரியம் நடக்கும்னு மக்களுக்கு நல்லாவே தெரியும்! திமுக தீயா வேலை செய்யுதுன்னா… அந்த நெருப்புல எரியப்போறது யாருடைய கனவுன்னு மே 4ல் தெரியும்.. உடன்பிறப்புகள் உற்சாகம்..!

தமிழகச் சட்டமன்ற தேர்தல் களம் அதன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், களத்தில் நிலவும் அரசியல் நகர்வுகள் மற்றும் தொகுதிகளின் தற்போதைய நிலவரங்கள் குறித்த ‘ஸ்கேன் ரிப்போர்ட்’ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, பெரம்பூர் மற்றும்…

vijay in politics

தமிழகச் சட்டமன்ற தேர்தல் களம் அதன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், களத்தில் நிலவும் அரசியல் நகர்வுகள் மற்றும் தொகுதிகளின் தற்போதைய நிலவரங்கள் குறித்த ‘ஸ்கேன் ரிப்போர்ட்’ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக, பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய தொகுதிகளில் திமுக மிகவும் பலமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நடிகர் விஜய்யின் வருகை இளைஞர்கள் மத்தியில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தினாலும், அது திமுகவின் வெற்றியை பெரிய அளவில் பாதிக்காது என்று கள ஆய்வுகள் கூறுகின்றன.

விஜய்யின் மீதான அபிமானம் ஒருபுறம் இருந்தாலும், தொகுதி பிரச்சனைகளை அவர் எவ்வாறு கையாள்வார் என்ற கேள்வி நடுநிலை வாக்காளர்கள் மத்தியில் எழுந்துள்ளது. குறிப்பாக பெரம்பூர் போன்ற குறுகிய தெருக்கள் கொண்ட தொகுதிகளில், விஜய் போன்ற ஒரு நட்சத்திர தலைவர் களப்பணிகளை செம்மையாக செய்வாரா என்ற ஐயம் மக்களிடையே நிலவுவது திமுகவிற்கு சாதகமாக மாறியுள்ளது.

மறுபுறம், விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தில் நிலவும் நிர்வாக சுணக்கங்கள் அக்கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளன. கட்சியின் முக்கிய தலைவர்களான புஸ்ஸி ஆனந்த் போன்றோர் தொகுதிகளில் கவனம் செலுத்தாமல் விஜய் உடனான பயணங்களிலேயே இருப்பதால், உள்ளூர் நிர்வாகிகள் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது.

பெரம்பூர் போலவே திருச்சி கிழக்கிலும் திமுக வலிமையாக இருப்பதாகவும், கடைசி நேரத்தில் விஜய்க்கு பதில் திமுகவுக்கு நடுநிலை வாக்குகள் செல்ல அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மொத்தத்தில் விஜய்யின் 2 தொகுதிகளிலும் திமுக தீயாய் வேலை செய்து கொண்டிருக்கும் நிலையில், தனது தொகுதி பக்கமே போகாமல் விஜய் மக்களை முழுமையாக நம்பியிருக்கிறார் என்பது எந்த அளவுக்கு பலன் கொடுக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்