“வரவு எட்டணா, செலவு பத்தணா.. வருமானத்தில் 95% சேமித்த இளைஞர்.. முதல் வருமானம் ரூ.10,000.. இன்று கோடீஸ்வரர்..

  பணக்காரர் ஆவது எப்படி? அதிகம் சம்பாதிப்பதில் இல்லை, புத்திசாலித்தனமாகச் செலவழிப்பதில்தான்! – பிரபல யூடியூபரின் ‘சூப்பர் சீக்ரெட்’ மனம் திறந்த பதிவு! பணக்காரர் ஆவதற்கு அதிக வருமானம் ஈட்ட வேண்டும் என்று நாம்…

akshay

 

பணக்காரர் ஆவது எப்படி? அதிகம் சம்பாதிப்பதில் இல்லை, புத்திசாலித்தனமாகச் செலவழிப்பதில்தான்! – பிரபல யூடியூபரின் ‘சூப்பர் சீக்ரெட்’ மனம் திறந்த பதிவு!

பணக்காரர் ஆவதற்கு அதிக வருமானம் ஈட்ட வேண்டும் என்று நாம் அடிக்கடி கேள்விப்பட்டிருப்போம். ஆனால், செலவுகளை கட்டுப்படுத்த தெரிந்தாலே போதும், அதுவே பணக்காரர ஆக மிகப்பெரிய ரகசியம் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? பிரபலமான யூடியூபர் மற்றும் ‘விஸ்டம் ஹேட்ச்’ நிறுவனத்தின் நிறுவனர் அக்ஷத் ஸ்ரீவஸ்தவா, X தளத்தில் சமீபத்தில் பகிர்ந்த ஒரு பதிவு, பலரின் மனதை மிகவும் கவர்ந்துள்ளது.

இது வழக்கம் போல, ஏழ்மையிலிருந்து செல்வந்தரான ஒரு கதை அல்ல; அதிர்ஷ்டம், குறுக்குவழிகள் அல்லது ஒரே இரவில் கிடைத்த புகழ் பற்றியதும் இல்லை. மாறாக, இது வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் கட்டுப்பாடு, தொடர்ச்சியான முயற்சி, மற்றும் புத்திசாலித்தனமான பண மேலாண்மை முடிவுகள் பற்றி பேசுகிறது. அவருடைய பயணம் ஒரு மிகச் சாதாரண நிலையில் இருந்துதான் தொடங்கியுள்ளது. அவர் அந்த பதிவில் கூறியதாவது:

“நான் என் பணியை தொடங்கியபோது, என்னுடைய சம்பளம் வெறும் 10,000 ரூபாய்தான். பெற்றோருடன் வசித்து வந்தேன். செகண்ட் ஹேண்டில் வாங்கிய மொபைல் போனை பயன்படுத்தினேன். வீட்டிலேயே சமைத்த உணவைத்தான் சாப்பிட்டேன். அப்போது எனக்கு திருமணம் ஆகவில்லை, குழந்தைகள் இல்லை, எந்த கடனும் இல்லை. அப்போதும், மாதத்திற்கு 1,000 முதல் 2,000 ரூபாய் வரை சேமித்தேன்,” என்று அவர் தனது பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

சில ஆண்டுகளுக்குப் பிறகு, எனக்கு ஒரு நல்ல கார்ப்பரேட் வேலை கிடைத்தது. ஆண்டுக்கு 50 லட்சம் ரூபாய் சம்பாதிக்க ஆரம்பித்தேன். நான் எந்த கடனும் வாங்கவில்லை. வருடத்திற்கு குறைந்தது 20 லட்சம் ரூபாய் சேமித்தேன். என் சேமிப்பில் கிட்டத்தட்ட அனைத்தையும் அதிக வளர்ச்சி உள்ள முதலீட்டு திட்டங்களில் போட்டேன். இதை சில ஆண்டுகள் செய்தேன். அந்த நேரத்தில், என் முதலீடுகளிலிருந்து எனக்கு போதுமான வருமானம் வர ஆரம்பித்தது.

“இப்போது எனக்கு குடும்பம் மற்றும் குழந்தைகள் இருக்கின்றனர்; பொறுப்புகள் அதிகரித்துள்ளன. நான் ஒரு விலையுயர்ந்த நகரத்தில் வசிக்கிறேன், உலகமெல்லாம் பயணம் செய்கிறேன். ஆனாலும், எனது ஆண்டு வருமானத்தில் கிட்டத்தட்ட 95% சேமிக்கிறேன். என் வாழ்க்கையின் எந்த கட்டத்திலும், என்னுடைய வாழ்க்கை முறை செலவுகள் எனது வருமானத்தை மிஞ்சியதில்லை. என் வாழ்க்கையின் எல்லா படிநிலைகளையும் நான் அனுபவிக்கிறேன்கடவுளுக்கு மிகவும் நன்றி,” என்று அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

அக்ஷத் தனது பதிவை ஒரு மிகவும் பயனுள்ள அறிவுரையுடன் முடித்தார்: “ஒரு பொருளை வாங்க வேண்டும் என்றால் அந்த பொருள் நமக்கு தேவையா? நமக்கு பலன் கொடுக்குமா? என ஒருமுறைக்கு இரண்டு முறை யோசித்து, கண்டிப்பாக அந்த பொருள் தேவை என்றால் மட்டும் வாங்குங்கள்’ என்று முடிக்கிறார்.

இந்த பதிவுக்கு ஒரு பயனர், “அருமையாக சொன்னீர்கள்! எதையும் வாங்குவதற்கு முன் இரண்டு முறை யோசியுங்கள். என் நண்பர் அடிக்கடி கூறுவார்: ‘நீங்கள் உங்கள் பணத்தை கட்டுப்படுத்தவில்லை என்றால், உங்கள் பணமே உங்களை கட்டுப்படுத்த ஆரம்பித்துவிடும்’,” என்று கருத்து தெரிவித்தார்.

மற்றொருவர், “இந்த மாதிரியான நிதி ஒழுக்கம் பற்றி யாரும் போதுமான அளவுக்கு பேசுவதில்லை. மிகப்பெரிய அட்வைஸ்’ என்று பாராட்டியிருந்தார்.

ஒருவர், “உங்கள் பயணத்தை பகிர்ந்துகொண்டதற்கு நன்றி! ஒழுக்கமும், புத்திசாலித்தனமான முதலீடும் காலப்போக்கில் எப்படி உண்மையான வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்று பார்ப்பது மிகவும் உத்வேகமாக இருக்கிறது. தொடர்ந்து செய்யுங்கள்!” என்று எழுதினார்.

“வரவு எட்டணா, செலவு பத்தணா’ என்று வருமானத்திற்கு மேல் செலவு செய்யும், கிரெடிட் கார்டு வாங்கி கண்டதை வாங்கி செலவு செய்துவிட்டு பின்னர் சிக்கலில் மாட்டி கொள்பவர்களுக்கு இந்த பதிவு அவசியமானது’ என்று இன்னொருவர் கமெண்ட் செய்துள்ளார்.

https://x.com/Akshat_World/status/1934164105327169586