ஆப்பிள் ஐபோனுக்கு நிகரான விலை.. அப்படி என்ன இருக்குது இந்த சாம்சங் போனில்? ரூ.40,999

Published:

ஸ்மார்ட்போன்களில் ஆப்பிள் ஐபோன்கள்தான் விலை உயர்ந்தது என்பது தெரிந்ததே. குறைந்தபட்சம் 40 ஆயிரம் ரூபாய்க்கு ஐபோன் வாங்கலாம் என்பதும் அதிகபட்சமாக 70 ஆயிரத்துக்கு மேல் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் ஆப்பிள் ஐபோன்க்கு இணையாக அதாவதுரூ.40,999 ரூபாய் மதிப்பில் சமீபத்தில் வெளியான சாம்சங் போனில் என்ன சிறப்பம்சங்கள் உள்ளன என்பதை தற்போது பார்ப்போம்

Samsung Galaxy A54 5G இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் இந்த ஸ்மார்ட்போன் இரண்டு இரண்டு ஸ்டோரேஜ் மாடல்களில் கிடைக்கிறது:

6.4 இன்ச் சூப்பர் AMOLED பிளஸ் டிஸ்ப்ளே மற்றும் 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் உள்ள இந்த ஸ்மார்ட்போன் 2.4 GHz octa-core MediaTek Dimensity 900 பிராசசர் மூலம் இயக்கப்படுகிறது. 8GB RAM மற்றும் 50 மெகாபிக்சல் பிரதான சென்சார், 12 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் சென்சார் மற்றும் 5 மெகாபிக்சல் டெப்த் சென்சார் ஆகியவற்றைக் கொண்ட இந்த ஸ்மார்ட்போனி 32 மெகாபிக்சல் செல்பி கேமராவும் உள்ளது.

ஆண்ட்ராய்டு 13 இல் இயங்கும் இந்த ஸ்மார்ட்போன் 5000mAh பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது. இது 15W வேகமான சார்ஜிங்கை ஆதரிக்கிறது.

Samsung Galaxy A54 5G ஸ்மார்ட்போனின் முழு விவரக்குறிப்புகள் இதோ:

* 6.4-இன்ச் சூப்பர் AMOLED பிளஸ் டிஸ்ப்ளே
* 2.4 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 900 பிராசசர்
* 8 ஜிபி ரேம்
* 128 ஜிபி அல்லது 256 ஜிபி ஸ்டோரேஜ்
* 50-மெகாபிக்சல் பிரதான சென்சார், 12-மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் சென்சார், 5-மெகாபிக்சல் டெப்த் சென்சார் கேமரா
* 32 மெகாபிக்சல் சென்சார் செல்பி கேமரா
* 5000mAh பேட்டரி
* ஆண்ட்ராய்டு 13 ஆப்பரேட்டிங் சிஸ்டம்

Samsung Galaxy A54 5G என்பது பணத்திற்கு நல்ல மதிப்பை வழங்கும் ஒரு பட்ஜெட் ஸ்மார்ட்போன் ஆகும். வேகமான ப்ராசஸர், நல்ல டிஸ்ப்ளே, திறன் கொண்ட கேமரா அமைப்பு ஆகியவற்றைக் கொண்டுள்ளது. நீங்கள் ஒரு புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போன் தேடுகிறீர்கள் என்றால் Samsung Galaxy A54 5G ஒரு நல்ல தேர்வாகும்.

மேலும் உங்களுக்காக...