ரூ.89.999 விலையில் ஒரு ஓப்போ ஸ்மார்ட்போன்.. ஆச்சரியத்தக்க சிறப்பம்சங்கள்..!

Published:

பொதுவாக ரூ.10 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை மிகச் சிறந்த ஸ்மார்ட்போன்கள் விற்பனையாகி வரும் நிலையில் ஓப்போ நிறுவனம் சுமார் 90 ஆயிரம் விலையில் ஒரு ஸ்மார்ட் போனை அறிமுகப்படுத்தியிருக்கும் நிலையில் அந்த ஸ்மார்ட்போனில் உள்ள ஆச்சரியத்தக்கமான சிறப்பம்சங்கள் குறித்து தற்போது பார்ப்போம்.

Oppo Find N2 Flip 5G கடந்த மார்ச் மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் இதன் ஆரம்ப விலை ரூ.89,999. கருப்பு மற்றும் வெள்ளை ஆகிய இரண்டு வண்ணங்களில் கிடைக்கும் இந்த ஸ்மார்ட்போன் 6.8 இன்ச் AMOLED டிஸ்ப்ளே கொண்டுள்ளது. கவர் டிஸ்ப்ளே 3.26 இன்ச் AMOLED டிஸ்ப்ளே ஆகும்.

இந்த ஸ்மார்ட்போன் MediaTek Dimensity 9000+ பிராசசர் மூலம் இயக்கப்படுகிறது. 12GB ரேம் மற்றும் 256GB ஸ்டோரேஜ் கொண்ட இந்த போனில் 50 மெகாபிக்சல் பிரதான சென்சார், 8 மெகாபிக்சல் அல்ட்ராவைட் சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ சென்சார் ஆகியவற்றைக் கொண்ட மூன்று கேமராவும், 32 மெகாபிக்சல் செல்பி கேமராவிம், உள்ளது.

ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் கொண்ட இந்த ஸ்மார்ட்போனில் 44W SuperVOOC ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 4300mAh பேட்டரி இருப்பதால் ஒருசில நிமிடங்களில் முழு அளவில் சார்ஜ் ஆகிவிடும்.

Oppo Find N2 Flip 5G ஸ்மார்ட்போனின் முழு விவரங்களை சுருக்கமாக பார்ப்போம்,.

* 120Hz புதுப்பிப்பு வீதத்துடன் 6.8-இன்ச் AMOLED டிஸ்ப்ளே
* 3.26-இன்ச் AMOLED கவர் டிஸ்ப்ளே
* MediaTek Dimensity 9000+ பிராசசர்
* 12 ஜிபி ரேம்
* 256 ஜிபி ஸ்டோரேஜ்
* 50 மெகாபிக்சல் பிரதான சென்சார், 8 மெகாபிக்சல் அல்ட்ராவைடு சென்சார், 2 மெகாபிக்சல் மேக்ரோ சென்சார் கேமரா
* 32 மெகாபிக்சல் செல்பி கேமரா
* 44W SuperVOOC ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 4300mAh பேட்டரி
* ஆண்ட்ராய்டு 13 ஆப்பரேட்டிங் சிஸ்டம்

Oppo Find N2 Flip 5G ஒரு போல்டு போன் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் உங்களுக்காக...