முன்னணி நிறுவனம் ஒன்றில் லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த இளம் பெண் ஒருவர் தனது வேலையை ராஜினாமா செய்து விட்டு ஆன்லைனில் ஜவுளி வியாபாரம் பார்த்து தற்போது தினமும் லட்சக்கணக்கில் சம்பாதித்து வருவதாக கூறப்படுகிறது.
ஜாரன் கவானி என்ற பெண் முன்னணி பங்கு வர்த்தக நிறுவனத்தில் முக்கிய பணியில் இருந்த நிலையில் அவருக்கு லட்சக்கணக்கில் சம்பளம் கிடைத்தது. ஆனால் அந்த பணியில் திருப்தி அடையாத அவர் பணியை ராஜினாமா செய்து விட்டு ஆன்லைன் மூலம் ஜவுளி வியாபாரம் செய்யும் தொழிலை தொடங்கினார்.
பொதுவாகவே தனக்கு ஷாப்பிங் செய்வது ரொம்ப பிடிக்கும் என்று அதனால் இந்த தொழிலை தொடங்கியதாக கூறிய கவானி, ஆரம்பத்தில் சவாலாக இருந்தாலும் அதன் பிறகு தனது பிசினஸ் நன்றாக இருக்கிறது என்று சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
தற்போது தனக்கு மாதம் 84 லட்சம் ரூபாய் வருமானம் கிடைக்கிறது என்றும் தன்னுடைய பிசினஸ் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே வருகிறது என்றும் ஆன்லைன் மூலம் தனது வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது என்றும் தெரிவித்துள்ளார்.
13 ஆண்டுகளாக ஆன்லைனில் பேஷன் டிசைன் ஆடைகளை விற்பனை செய்து வருகிறேன் என்றும் தனது பிசினஸுக்கு தேவையான முதலீடு மிகவும் குறைவு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பங்கு வர்த்தகத்தில் பல ஆண்டுகள் அனுபவம் உள்ள தனக்கு அதிலிருந்து விடுபட்டு தற்போது தனக்கு பிடித்தமான சொந்த தொழிலை செய்து வருவது மகிழ்ச்சியாக இருக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.
தற்கால இளைஞர்கள் பலர் ஒரு நிறுவனத்தில் சம்பளத்திற்கு வேலை பார்ப்பதை விட சொந்த தொழிலில் ஈடுபடுவதில் தான் அதிக அக்கறை காட்டி வரும் நிலையில் இளைஞர்களுக்கு ஒரு உந்து சக்தியாக இவர் ஆன்லைன் மூலம் ஜவுளி வியாபாரம் செய்து வருகிறார் என்பதும் இதன் மூலம் கிட்டத்தட்ட தினமும் இவர் மூன்று லட்ச ரூபாய் சம்பாதித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.