மெடிக்கல் பாலிசியில் ஏற்கனவே இருக்கும் நோய்க்கு கிளைம் பணம் கிடைக்குமா?

Published:

பொதுமக்களிடத்தில் தற்போது மெடிக்கல் பாலிசி எடுக்கும் விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது. ஒரு மனிதனுக்கு திடீரென ஏற்படும் செலவு என்றால் அது உடல் நலக்குறைவு ஏற்படும் போது சிகிச்சைக்கு ஏற்படும் செலவுதான். குறிப்பாக விபத்து போன்ற எதிர்பாராத சம்பவம் நடந்தால், நாம் கிட்டத்தட்ட வாழ்நாள் முழுவதும் சேர்த்து வைத்த மொத்த தொகையும் உள்ள சிகிச்சைக்கு செலவாகிவிடும் என்பதால் மருத்துவ பாலிசி எடுப்பது ஒவ்வொருவருக்கும் அத்தியாவசியம் என்ற விழிப்புணர்வு தற்போது ஏற்பட்டு வருகிறது.

ஒவ்வொரு வருடமும் ஒரு குறிப்பிட்ட தொகையை மட்டும் பாலிசிக்காக செலுத்தி விட்டால் அதன் பிறகு நமக்கு எதிர்பாராத விபத்து நேர்ந்தாலோ அல்லது மாரடைப்பு போன்ற நோய் ஏற்பட்டாலோ ஒரு பைசா செலவு இல்லாமல் நீங்கள் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம் என்பது தான் மெடிக்கல் பாலிசியின் பலனாகும்.

ஆனால் அதே நேரத்தில் மெடிக்கல் பாலிசி எடுப்பதற்கு முன் சில விஷயங்களை நிறுவனத்தின் ஏஜென்டிடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். குறிப்பாக ஏற்கனவே பாலிசி எடுப்பவருக்கு நோய் இருந்தால் அந்த நோய்க்கு கிளைம் கிடைக்குமா என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். நீரிழிவு உள்ளிட்ட நோய் ஏற்கனவே ஒரு பாலிசிதாரர்களுக்கு இருந்தால் அந்த பாலிசிதாரர்களுக்கு உடனே கிளைம் கிடைக்காது. குறைந்தது மூன்று ஆண்டுகள் பாலிசி கட்டணம் செலுத்திய பிறகு அதற்கு கிளைம் பண்ண முடியும். இது ஒவ்வொரு நிறுவனத்திற்கு மாறுபடலாம், சில நிறுவனங்களில் ஐந்து ஆண்டு வரை கூட இருக்கும்.

எனவே மருத்துவ பாலிசி எடுத்து விட்டால் உடனே ஏற்கனவே உள்ள நோய்க்கும் கிளைம் செய்து விடலாம் என்று நினைத்து ஏமாற வேண்டாம். பாலிசி எடுப்பதற்கு முன்பு ஏற்கனவே ஏற்கனவே இந்த நோய் தனக்கு உள்ளது, இந்த நோய்க்கு எப்போதும் முதல் கிளைம் கிடைக்கும் என்பதை தெளிவாக தெரிந்து கொள்ளுங்கள். அது மட்டும் இல்ல ஏற்கனவே உங்களுக்கு இருக்கும் நோயை  இன்சூரன்ஸ் ஏஜென்சி இடம் மறைக்க வேண்டாம். ஏனென்றால் அது உண்மையாகவே கிளைம் கிடைக்கும் நேரத்தில் சில சிக்கல்களை ஏற்படுத்தலாம் என்றும் கூறப்பட்டு வருகிறது.

மேலும் உங்களுக்காக...