79 வயதில் 7வது குழந்தைக்கு தந்தையான பிரபல நடிகர்.. இன்னும் குழந்தை பிறக்கும் என பேட்டி..!

Published:

பிரபல அமெரிக்க நடிகர் ஏழாவது குழந்தைக்கு தந்தை ஆகியுள்ள நிலையில் தனக்கு இன்னும் குழந்தை பிறக்கும் என்ற நம்பிக்கை இருப்பதாக கூறி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிரபல அமெரிக்க நடிகர் ராபர்ட் நிரோ. ’தி காட்பாதர்’ திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்த இவர் ஏராளமான ஹாலிவுட் படங்களில் நடித்துள்ளார். இவர் ஆறு குழந்தைக்கு தந்தை என அனைவரும் நினைத்துக் கொண்டிருக்கும் நிலையில் தனக்கு ஏழு குழந்தைகள் இருப்பதாக சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியுள்ளார். ஆனால் ஏழாவது குழந்தையின் அம்மா யார் என்பதை அவர் குறிப்பிடவில்லை.

குழந்தைகள் பிறப்பதை சட்டம் வகுத்து கட்டுப்படுத்த முடியாது என்றும் அது எனக்கு மட்டுமின்றி எந்த பெற்றோருக்கும் பிடிக்காது என்றும் அவர் அந்த பேட்டியில் கூறினார். பேட்டி எடுத்தவர் உங்களுக்கு ஆறு குழந்தைகள் என்று தான் நினைக்கிறேன் என்று கூற இல்லை எனக்கு ஏழாவது குழந்தை என்றும் ஏழாவது குழந்தை சமீபத்தில் தான் பிறந்தது என்றும் அவர் கூறியுள்ளார். இருப்பினும் அந்த குழந்தையின் தாய் யார் என்பதை அவர் கூற மறுத்துவிட்டார்.

ஏழு குழந்தைகளுக்கு தந்தையான போதிலும் இன்னும் தனக்கு குழந்தை பிறக்கும் என்று தான் நம்புவதாகவும் குழந்தை பெற்றுக் கொள்வதை தான் விரும்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.

நீரோ மற்றும் அவரது முதல் மனைவி அமெரிக்க நடிகர் டியான்னே அபோட் ஆகியோர் கடந்த 1976ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இந்த ஜோடிக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர். இந்த ஜோடி 1988ஆம் ஆண்டு பிரிந்தது.

அதன்பின்னர் மாடல் டூக்கி ஸ்மித் என்பவரை நீரோ திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த ஜோடிக்கு இரட்டை மகன்களான ஜூலியன் மற்றும் ஆரோன் பிறந்தனர். அதன் பின் நீரோ   கிரேஸ் ஹைடவருடன் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த ஜோடிக்கு எலியட், ஹெலன் கிரேஸ் ஆகிய இரண்டு மகள்கள் உள்ளனர்.

மேலும் உங்களுக்காக...