5 நிமிடங்களில் 0 – 100% சார்ஜ் ஆகும் உலகின் அதிவேக சார்ஜ் மொபைல்.. ரியல்மீ அசத்தல்..!

By Bala Siva

Published:

ஐந்தே நிமிடங்களில் 0 சதவீதம் முதல் 100% வரை சார்ஜ் ஆகும் உலகின் அதிவேக சார்ஜிங் மொபைல்போனை ரியல்மீ அறிமுகப்படுத்தப்பட உள்ள நிலையில் வாடிக்கையாளர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.

ஸ்மார்ட்போனை பொருத்தவரை வேகமாக சார்ஜிங் ஆக வேண்டும், அதே நேரத்தில் மெதுவாக சார்ஜிங் குறைய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு வாடிக்கையாளர்கள் மத்தியில் உள்ளது. குறிப்பாக ஒரு மொபைல்போனை சார்ஜ் செய்யும் போது அரை மணி நேரம் அல்லது ஒரு மணி நேரத்தில் முழுவதுமாக சார்ஜ் செய்யப்பட்டு வரும் நிலையில் ஐந்தே நிமிடங்களில் 0% சார்ஜ் இருந்தாலும் 100% வரை சார்ஜ் செய்யும் ஸ்மார்ட்போனை ரியல்மி நிறுவனம் வெளியிடவுள்ளது.

உலகின் அதிவேக சார்ஜிங் மொபைல் என்று கூறப்படும் இந்த மொபைல் ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாக இருப்பதாகவும் இந்த போனை 0 முதல் 50 சதவீதம் வரை சார்ஜ் செய்ய மூன்று நிமிடங்கள் மட்டுமே ஆகும் என்றும்,  0 முதல் 100 சதவீதம் சார்ஜ் செய்ய ஐந்து நிமிடங்கள் மட்டுமே ஆகும் என்றும் இது தான் உலகின் அதிவேக சார்ஜிங் போன் என்றும் கூறப்படுகிறது.

ரியல்மி ஏற்கனவே 240W சார்ஜிங் திறன் உள்ள மொபைல்போனை வெளியிட்டுள்ள நிலையில் இந்த போன் 300W சார்ஜிங்  திறன் உள்ளது என்பது அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதே நேரத்தில் முழுவதுமாக சார்ஜ் செய்யப்பட்டவுடன் இந்த போன் எத்தனை மணி நேரம் சார்ஜ் நிற்கும் என்பது குறித்த தகவல் இப்போது வெளிவரவில்லை என்றாலும் ஆகஸ்ட் 14ஆம் தேதி இது குறித்த தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே ஒன் ப்ளஸ் உள்பட ஸ்மார்ட்போன்கள் அதிவேக சார்ஜிங் செய்யும் போன்களாக இருந்தாலும் 300W சார்ஜிங் திறன் உள்ள மொபைல்போனை ரியல்மீ அறிமுகப்படுத்தப்பட உள்ள நிலையில், இந்த  ஸ்மார்ட்போனை வாடிக்கையாளர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த போனில் விலை மற்றும் கூடுதல் விவரங்கள் இன்னும் ஓரிரு நாளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் உங்களுக்காக...