ஆர்சிபி ரசிகர்கள் மீது ஏற்கனவே நல்ல அபிப்பிராயம் ஐபிஎல் ரசிகர்களுக்கு இல்லை என்ற நிலையில், தற்போது பெங்களூரில் நடந்த விபத்தின் போது, ஆம்புலன்ஸ்க்கு கூட வழி விடாமல் மறித்து ஆர்சிபி ரசிகர்கள் வழிமறித்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இதற்கு நெட்டிசன்கள், “ஆர்சிபி ரசிகர்கள் இவ்வளவு கேவலமானவர்களா?” என்று பதிவு செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஐபிஎல் தொடரை ஐந்து முறை கோப்பையை பெற்ற சென்னை, மும்பை போன்ற அணிகள் கூட வெற்றியை சாதாரணமாக எடுத்துக்கொண்ட நிலையில், ஒரே ஒரு கோப்பையை பெற்ற ஆர்சிபி ஏதோ பாகிஸ்தானில் சென்று போரில் ஜெயித்து விட்டது போல பில்ட்அப் கொடுத்தது. அதிலும் குறிப்பாக விராட் கோலி உலக சாதனை செய்தது போல் துள்ளி குதித்தார்.
இதனை அடுத்து மறுநாளே பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் வெற்றி விழா கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில், முன்னறிவிப்பு இன்றி செய்த விழா மற்றும் பாதுகாப்பு குறைபாடு காரணமாக 11 பேர் பரிதாபமாக உயிரிழந்த நேரம்.
இதனை அடுத்து காவல்துறையினர் சில நடவடிக்கைகள் எடுத்த நிலையில், ஆர்சிபி ரசிகர்களின் ஆர்வக்கோளாறே இந்த விபத்துக்கு பாதி காரணம் என்று கூறப்பட்டுள்ளது.
ஆர்சிபி ரசிகர்களிடம் ஒரு ஒழுங்கின்மை இல்லை என்றும், சின்னசாமி ஸ்டேடியத்தின் கேட்டை உடைத்து சிலர் கேட் மேல் ஏறியும் தாண்டி வந்தார்கள் என்றும் போலீசாரால் கூறப்பட்டது.
சுமார் மூன்று லட்சத்திற்கு மேல் ரசிகர்கள் குவிந்ததால், வெறும் 5000 போலீசாரால் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய முடியவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள வீடியோ ஒன்றில், காயமடைந்தவர்களை மருத்துவமனையில் சேர்ப்பதற்காக உதவிக்கு வந்த ஆம்புலன்ஸ்க்கு கூட வழி விடாமல் ஆர்சிபி ரசிகர்கள் வழிமறித்த காட்சி தெரிகிறது.
இதனை பார்த்த நெட்டிசன்கள், “ஆர்சிபி ரசிகர்கள் இவ்வளவு கேவலமானவர்களா? ஒரு கிராமத்தில் கூட ஆம்புலன்ஸ் சத்தம் கேட்டால் உடனே அதற்கு வழி விடுவார்கள். ஆனால் பெங்களூர் போன்ற நாகரீகம் உள்ள ஒரு நகரில், படித்தவர்கள் அதிகம் உள்ள ஒரு ஆம்புலன்ஸுக்கு வழி விட வேண்டும் என்ற அடிப்படை அறிவு கூட இல்லையா?” என்று பதிவு செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.