வெறும் 112 ரன்கள் டார்கெட் கொடுத்து வெற்றி பெற்ற பஞ்சாப்.. பவுலர்களின் மாயாஜாலம்..!

  ஐபிஎல் தொடரில் இன்று பஞ்சாப் மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி வெறும் 111 ரன்கள் எடுத்து 112 என்ற இலக்கை கொடுத்து, அந்த…

punjab

 

ஐபிஎல் தொடரில் இன்று பஞ்சாப் மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி வெறும் 111 ரன்கள் எடுத்து 112 என்ற இலக்கை கொடுத்து, அந்த இலக்கை கூட எட்ட விடாமல் பஞ்சாப் வீரர்கள் மாயாஜாலம் செய்து கொல்கத்தா அணியின் 10 விக்கெட்டுகளை வெறும் 95 ரன்கள் எடுத்த நிலையில் அபார வெற்றி பெற்றனர். இதனை அடுத்து அந்த அணிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

இன்றைய போட்டியில் முதலில் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த பஞ்சாப் அணிக்கு ஆரம்பம் முதல் அதிர்ச்சி தான் கிடைத்தது. எந்த ஒரு பேட்ஸ்மேனும் பொறுப்புடன் விளையாடவில்லை என்பதால், பஞ்சாப் அணி 15.3 ஓவர்களில் 111 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது.

இதனை அடுத்து 112 என்ற எளிய இலக்கை நோக்கி கொல்கத்தா அணி விளையாடிய நிலையில், ஆரம்பமே அந்த அணிக்கு அதிர்ச்சி கிடைத்தது. முதல் ஓவரில் சுனில் நரேன் அவுட்டாக, இரண்டாவது ஓவரில் குவிண்டன் டீகாக் அவுட் ஆனார். அதன் பிறகு வரிசையாக விக்கெட்டுகள் விழுந்து கொண்டே இருந்தன. இறுதியில் 15.1 ஓவரில் 95 ரன்கள் எடுத்த நிலையில் பஞ்சாப் ஆல் அவுட் ஆகியது. சாஹல் அபாரமாக பந்துவீசி 4 விக்கெட்டுக்களையும் மார்கோ மூன்று விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்..

இதனை அடுத்து பஞ்சாப் அணி இன்றைய வெற்றியின் மூலம் 8 புள்ளிகளுடன் நான்காவது இடத்தை பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.