கர்ப்பிணியின் வயிற்றில் ஜெல் தடவுவதற்கு பதில் ஆசிட் பயன்படுத்திய நர்ஸ்.. சில மணி நேரங்களில் நர்ஸ் தலைமறைவு.. கர்ப்பிணி பெண் படுகாயம்..!

  மகாராஷ்டிராவின் ஜால்னா மாவட்டத்தில் உள்ள போக்கர்தன் கிராமப்புற மருத்துவமனையில், அதிர்ச்சியூட்டும் மருத்துவ அலட்சிய சம்பவம் ஒன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அங்கு, கர்ப்பிணி பெண்ணுக்குச் சோனோகிராபி செய்வதற்கு முன், ஒரு செவிலியர் தவறுதலாக ஜெல்…

pregnant

 

மகாராஷ்டிராவின் ஜால்னா மாவட்டத்தில் உள்ள போக்கர்தன் கிராமப்புற மருத்துவமனையில், அதிர்ச்சியூட்டும் மருத்துவ அலட்சிய சம்பவம் ஒன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அங்கு, கர்ப்பிணி பெண்ணுக்குச் சோனோகிராபி செய்வதற்கு முன், ஒரு செவிலியர் தவறுதலாக ஜெல் தடவுவதற்கு பதிலாக ஆசிட்டை பயன்படுத்தியதால், அந்தப் பெண்ணுக்கு படுகாயம் ஏற்பட்டது.

28 வயதான ஷீலா சந்தீப் பலேராவ் என்பவர், பிரசவ வலி காரணமாக புதன்கிழமை காலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பிரசவத்திற்கு முன் சோனோகிராபி செய்வதற்கு செவிலியர் ஒருவர் அவரது வயிற்றில் ஏதோ ஒரு ரசாயன பொருளை பூசியிருக்கிறார். சில நிமிடங்களிலேயே அந்ப் பொருளால் ஷீலாவுக்கு கடுமையான எரிச்சல் ஏற்பட்டுள்ளது.

அந்தப் பொருளை பூசியவுடன், ஷீலாவுக்கு அடிவயிற்றில் கடுமையான வலியும் வீக்கமும் ஏற்பட்டதாக கூறியுள்ளார். மருத்துவர்கள் உடனடியாக விரைந்து வந்தபோதும், நிலைமையின் தீவிரத்தை அவர்கள் உணரும் முன்பே, ஷீலாவின் மென்மையான தோலில் ஆழமான தீக்காயங்கள் ஏற்பட்டிருந்தன.

கடுமையான வலி மற்றும் காயங்கள் இருந்தபோதிலும், ஷீலா சுமார் அரை மணி நேரம் கழித்து ஒரு ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுத்தார். அதிர்ஷ்டவசமாக, குழந்தைக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. இருப்பினும், ஷீலாவின் வயிறு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஆழமான தீக்காயங்கள் ஏற்பட்டதால், அவர் உடனடியாக மேல் சிகிச்சைக்காக ஒரு சிறப்பு வார்டுக்கு மாற்றப்பட்டார்.

இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட ஷீலாவின் குடும்பத்தினர் மிகுந்த அதிர்ச்சியும், கோபமும் அடைந்தனர். அவர்கள் சம்பந்தப்பட்ட செவிலியரிடம் கேள்வி எழுப்பியபோது, அவர் அவர்களை கடிந்துகொண்டு, சுமார் இரண்டு மணி நேரம் மருத்துவமனையில் இருந்து காணாமல் போனதாக கூறப்படுகிறது. செவிலியரின் இந்த செயல், அந்த மருத்துவமனையின் செயல்பாடுகள் குறித்து பல கேள்விகளை எழுப்பியுள்ளது.