இதுவரை எந்தவொரு அரசியல் தலைவரையும் மக்கள் ‘அண்ணா’ என்று அழைத்ததில்லை.. எம்ஜிஆரை கூட தலைவர், வாத்தியார் என்று தான் அழைத்தனர்.. ஜெயலலிதாவை ‘அம்மா’ என்று பல வருடங்கள் கழித்து முதல்வரான பின்னர் தான் அழைத்தனர் ஆனால் விஜய்யை தங்கள் வீட்டின் ஒருவராக கோடிக்கணக்கானோர் பார்க்கின்றனர். இதுதான் விஜய்யின் மிகப்பெரிய பிளஸ்.. நம் வீட்டில் இருந்து முதல்வராகிறார் என்ற மனப்பான்மை பலரிடம் வந்துவிட்டது..

தமிழக அரசியல் வரலாற்றில், ஒரு தலைவருடன் மக்கள் கொண்டிருக்கும் பிணைப்பு எவ்வாறு வெளிப்படுகிறது என்பதை பொறுத்தே, அந்த தலைவரின் அரசியல் சக்தி தீர்மானிக்கப்படுகிறது. இதுவரை எந்தவொரு அரசியல் தலைவருக்கும் கிடைக்காத, கட்சி ஆரம்பிக்கும் முன்பே…

vijay anna

தமிழக அரசியல் வரலாற்றில், ஒரு தலைவருடன் மக்கள் கொண்டிருக்கும் பிணைப்பு எவ்வாறு வெளிப்படுகிறது என்பதை பொறுத்தே, அந்த தலைவரின் அரசியல் சக்தி தீர்மானிக்கப்படுகிறது. இதுவரை எந்தவொரு அரசியல் தலைவருக்கும் கிடைக்காத, கட்சி ஆரம்பிக்கும் முன்பே மக்கள் மனதில் ஒரு குடும்ப உறுப்பினராக, ஒரு வீட்டுப் பிள்ளையாக நிலைநிற்கும் தனித்துவமான வாய்ப்பு நடிகர் விஜய்க்கு மட்டுமே கிடைத்துள்ளது. இதுவே விஜயின் தமிழக வெற்றிக் கழகம் அரசியல் களத்தில் ஏற்படுத்தும் மிகப்பெரிய திருப்புமுனை என அரசியல் விமர்சகர்கள் ஒருமித்த குரலில் கூறுகின்றனர்.

தமிழக அரசியல் தலைவர்களுக்கு மக்கள் வழங்கும் விளிப்பெயர்கள், அவர்களின் அதிகாரம் மற்றும் ஆளுமையின் பரிணாமங்களை குறிப்பதாகவே உள்ளன. மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களை மக்கள் ‘தலைவர்’ அல்லது ‘வாத்தியார்’ என்று அழைத்தனர். இந்த அழைப்புகள், அவர் ஒரு மாபெரும் வழிகாட்டியாகவும், திரையுலகத்தின் ஆசானாகவும் அங்கீகரிக்கப்பட்டதை காட்டின. அதேபோல, முன்னாள் முதல்வர் கருணாநிதியை அவரது கட்சி தொண்டர்கள் ‘கலைஞர்’ என்ற விளிப்பெயரை கொண்டு அழைத்தனர். இன்னொரு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு, அவர் அரசியலுக்கு வந்து முதல்வரான பின்னர் பல வருடங்கள் கழித்துத்தான் ‘அம்மா’ என்னும் விளிப்பு பெயர் கிடைத்தது. அது அவருடைய கண்டிப்பான ஆளுமையையும், அதிகாரத்தையும், தாய்ப்பாசத்தையும் குறித்தது. விஜயகாந்தை கேப்டன் என அவரது கட்சியினர் அழைத்ததும் அவர் மீதான ஒரு மரியாதையினால் மட்டுமே.

ஆனால், நடிகர் விஜய்க்கு வழங்கப்படும் ‘அண்ணா’ என்னும் விளிப்பு, கட்சி எல்லைகளை தாண்டி, அனைத்து தரப்பு மக்களாலும் பயன்படுத்தப்படுகிறது. ‘அண்ணா’ என்பது ஒரு ரத்த உறவு பாலம். இது அதிகாரத்தை குறிக்காமல், மாறாக அன்பு, பாதுகாப்பு, மற்றும் சகோதரத்துவத்தை குறிக்கிறது. இந்த உறவு, அவர் அரசியலுக்கு வந்த பிறகல்ல, மாறாக திரைப்படங்கள் மூலமும், மக்கள் இயக்கத்தின் மூலம் செய்த களப் பணிகள் மூலமாகவும் பல ஆண்டுகளாக கட்டப்பட்டிருக்கிறது. விஜய்யின் மிகப்பெரிய பலமே, கோடிக்கணக்கான தமிழர்கள் அவரை தங்கள் வீட்டு உறுப்பினராக பார்ப்பதுதான்.

மற்ற அரசியல் தலைவர்கள் தேர்தலை நெருங்கும் போதுதான் ‘உங்கள் வீட்டுப் பிள்ளை’ என்று பிரச்சாரம் செய்வார்கள். ஆனால், விஜய் தன் திரைப் பயணம் மற்றும் மக்கள் பணியின் மூலம், மக்கள் மனதில் அந்த இடத்தை தானாகவே நிரப்பிவிட்டார். ‘நம் அண்ணா முதல்வரானால்’ என்ற மனப்பான்மை இன்று இளைஞர்கள் மற்றும் பெண்கள் மத்தியில் ஆழமாக வேரூன்றிவிட்டது. இந்த பிணைப்பு என்பது, கட்சிக் கொள்கைகள் மற்றும் கூட்டணி சமன்பாடுகளுக்கு எல்லாம் அப்பாற்பட்ட உணர்வுப்பூர்வமான வாக்கு வங்கியாக மாறுகிறது.

விஜய்யின் இந்த ‘உறவுக் கவர்ச்சி’ தான் இவருக்கான விளக்க முடியாத வெற்றியை அளிக்கும். ‘நம் வீட்டில் இருந்து ஒருவர் முதல்வராகிறார்’ என்று மக்கள் கருதும் ஒரு நபர் மீது எழும் விமர்சனங்கள், மக்கள் மனதிற்கு எளிதில் செல்வதில்லை. ‘அவர் அப்படி இருக்க மாட்டார், அவரை பற்றி தவறாக பேசுகிறார்கள்’ என்ற ஒரு தற்காப்பு மனப்பான்மை வாக்காளர்களிடையே இயல்பாகவே உருவாகிவிடுகிறது. தேர்தல் நேரத்தில் கொள்கைகளை ஆராய்ந்து வாக்களிப்பவர்களை விட, உணர்ச்சிப்பூர்வமாகவும், ஒரு தலைவரின் மீதுள்ள நம்பிக்கையினாலும் வாக்களிப்பவர்களின் எண்ணிக்கை மிக அதிகம். அந்த வகையில், விஜய், மற்ற கட்சிகளால் உடைக்க முடியாத ஒரு வலிமையான, உணர்ச்சிப்பூர்வமான வாக்கு வங்கியை வைத்திருக்கிறார்.

இந்த உணர்வுப்பூர்வமான பிணைப்பே, கடந்த 75 ஆண்டு கால அரசியல் வரலாற்றில் எந்தவொரு புதிய தலைவருக்கும், கட்சி தொடங்குவதற்கு முன்பே கிடைக்காத ஒரு மிகப்பெரிய வரப்பிரசாதம் ஆகும். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவிற்குப் பிறகு நிலவி வந்த மாஸ் லீடரின் தலைமை வெற்றிடத்தை, ஒரு அண்ணா என்ற உணர்வுப்பூர்வமான பிணைப்பின் மூலம் நிரப்பும் வாய்ப்பு விஜய்க்கு மட்டுமே கிடைத்துள்ளது. இந்த அசைக்க முடியாத மக்கள் தொடர்பு, விஜய்யின் அரசியல் பயணத்தில் மிக முக்கியமான வெற்றியை உறுதி செய்யும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.