மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து வெளியே வந்த 70 வயது பெண் ஒருவர், அதே மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டரால் மரணம் அடைந்த சம்பவம் மகாராஷ்டிரா மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
மகாராஷ்டிராவின் பல்கர் பகுதியில் நடைபெற்ற எதிர்பாராத விபத்தில் 70 வயது மூதாட்டி ஒருவர் சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்தார். அதே மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் ஒருவர் தனது காரால் மோதியதால் உயிரிழந்தார்.
அந்த மூதாட்டி, தனது கணவருடன் மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு சென்றிருந்தார். பின்னர் அவர் மருத்துவமனையை விட்டு வெளியே வந்தபோது இந்த விபத்து நடந்தது.
உயிரிழந்தவரின் பெயர் சயலதா விஷ்வநாத் அரேகர் என அடையாளம் காணப்பட்டுள்ளது. விபத்துக்குப் பிறகு அவரை உடனே அவசர சிகிச்சை பிரிவுக்கு கொண்டு சென்றனர், ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்த தகவல் கிடைத்த உடனே காவல்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று, சம்பந்தப்பட்ட மருத்துவரை கைது செய்தனர். காவல்துறையின் அறிக்கையின்படி, அங்கு உள்ள மருத்துவமனையில் பணியாற்றும் டாக்டர் ஏ.கே.தாஸ் என்பவர் காரை ஓட்டி வந்ததாகவும், கார் அவரது கட்டுப்பாட்டை இழந்து மிக அதிக வேகத்தில் சென்று நடைபாதையில் நடந்து கொண்டிருந்த அந்த மூதாட்டியை மோதியதும் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் இந்த சம்பவம் அருகில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோ காட்சியில், கார் கட்டுப்பாட்டை இழந்து சென்று, நேராக பாதையை கடந்து நடந்து கொண்டிருந்த மூதாட்டியை மோதி மோதியது. கார் மோதிய வேகத்தில் தூக்கி வீசப்பட்ட மூதாட்டி உடனே உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக மருத்துவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. டாக்டர் தாஸ் தற்போது காவலில் இருப்பதாகவும், அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருவதாகவும் தெரிகிறது.
தராபூர் காவல்துறை மற்றும் துணை காவல் கண்காணிப்பாளர் விகாஸ் நாயக் சம்பவ இடத்திற்கு வந்து, விரிவான விசாரணையை தொடங்கியுள்ளனர்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
