ஆனால் இந்த தகவலுக்கு முன்பாகவே, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீர் பகுதிகளில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை இந்தியா ‘ஆபரேஷன் சிந்தூர்’ மூலம் துல்லியமாக தாக்கியதாக அறிவித்திருந்தது. இதில் 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் அழிக்கப்பட்டனர். இந்திய தாக்குதல்களில் சுமார் 30 முதல் 40 பாகிஸ்தான் ராணுவத்தினர் உயிரிழந்ததாக இந்தியா தெரிவித்துள்ளது. பாகிஸ்தானின் பல ராணுவ விமானங்களும் இந்தியா தாக்கி வீழ்த்தியதாக தெரிவித்துள்ளது. இரு நாடுகளின் பலி எண்ணிக்கை அதிக வித்தியாசமாக இருப்பதால் மக்கள் குழப்பத்தில் உள்ளனர்.
ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலுக்கு பின் இந்தியாவுக்கு பதிலடி கொடுக்கும் பொருட்டு, பாகிஸ்தான் ராணுவம் ட்ரோன்கள் மற்றும் பிற ஏவுகணைகளை இந்திய ராணுவ வளாகங்கள் மற்றும் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளை நோக்கி ஏவியது. ஆனால் இந்தியா பெரும்பாலான தாக்குதல்களை தடுப்பதில் வெற்றி பெற்றது.
பாகிஸ்தான் தொடர்ந்து பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்திய நிலையில், இந்தியா பாகிஸ்தானின் விமான தளங்களைத் தீவிரமாக இலக்கு வைத்து தாக்கியது. இதில் விமான தளங்கள் உள்ளிட்ட முக்கிய கட்டமைப்புகள் அழிக்கப்பட்டன. அதன் பின்னர் பாகிஸ்தான் ராணுவ இயக்குனர் இந்தியாவின் இயக்குநருடன் தொடர்பு கொண்டு, போர் நிறுத்தம் கோரினார். தற்போது போர் நிறுத்தப்பட்டு அமைதியான சூழல் திரும்பி வருகிறது.
இந்நிலையில் நேற்று நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, “ஆபரேஷன் சிந்தூர்” இந்தியாவின் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையில் ஒரு “புதிய நிலையாக” அமைகிறது என்று தெரிவித்துள்ளார். மேலும் இந்தியா மீது பயங்கரவாத தாக்குதல் நடக்குமெனில் அதற்கு தக்க பதில் அளிக்கப்படும். அது இந்தியாவின் விதிகளின்படி மட்டுமே இருக்கும். பயங்கரவாதத்தின் வேர் எங்கு இருந்தாலும் அதனை அழிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இரண்டாவதாக, அணு ஆயுதங்களைக் கொண்டு பயமுறுத்தும் முயற்சியை இந்தியா தாங்காது.
மூன்றாவதாக, பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் அரசுக்கும், திட்டமிடும் நபர்களுக்கும் இடையே வித்தியாசம் காட்டாது,” என அவர் வலியுறுத்தினார்.
மேலும், “ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது, பயங்கரவாதிகளின் இறுதி ஊர்வலத்தில் பாகிஸ்தான் ராணுவத் தலைவர்கள் நேரில் வந்தது, பாகிஸ்தான் அரசால் பயங்கரவாதம் ஊக்குவிக்கப்படுவதற்கான நேரடி சான்றாகும்,” என மோடி கூறினார்.
“இந்தியா மற்றும் அதன் குடிமக்கள் மீது எந்தவொரு அச்சுறுத்தலையும் எதிர்த்து தீர்வு காண உறுதியுடன் நடவடிக்கைகள் தொடரப்படும்,” எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.