பாகிஸ்தானில் உள்ள நதியில் சுமார் 80 ஆயிரம் கோடி மதிப்புள்ள தங்கம் இருப்பதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதை பிரித்தெடுத்து பாகிஸ்தான் பயன்படுத்தினால், அந்த நாடு ஒரே நாளில் உலக பணக்கார நாடுகளில் ஒன்றாக மாறிவிடும் என்றும் கூறப்படுகிறது.
பாகிஸ்தானில் உள்ள இண்டஸ் நதியில் ஒரு பெரும் தங்கச் சுரங்கம் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாகவும், அரசின் அனுமதி உடன் நடத்தப்பட்ட ஆய்வில் மிகப்பெரிய அளவில் தங்கம் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தான் தற்போது கடும் பொருளாதார நெருக்கடியில் இருக்கும் நிலையில், இந்த தங்கத்தை தோண்டி எடுத்து பயன்படுத்த பாகிஸ்தான் அரசு திட்டமிட்டுள்ளது.
நேஷனல் இன்ஜினியரிங் சர்வீசஸ் ஆப் பாகிஸ்தான் என்ற அமைப்பும் பஞ்சாப் சுரங்கத்துறை என்ற அமைப்பும் இணைந்து இங்குள்ள தங்கத்தை எடுக்க முயற்சி செய்து கொண்டிருக்கின்றன. இதனை அடுத்து, இந்த நதியை தற்போது பாகிஸ்தானியர்கள் “தங்க நதி” என்று கூறி வருகின்றனர்.
தங்கம் மட்டுமின்றி, நீலமணிகள், வைரங்கள் உள்ளிட்ட மதிப்புமிக்க கனிம வளங்களும் இங்கே இருப்பதாக அறியப்படுகிறது. இந்த புதிய கண்டுபிடிப்பு பாகிஸ்தான் நாட்டை மிகப்பெரிய அளவில் மேம்படுத்தும் என்றும், ஆனால் அதே நேரத்தில் இந்த பணத்தை வைத்து மேலும் தீவிரவாத செயல்களில் ஈடுபடுமோ என்ற அச்சமும் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இன்னும் ஒரு சில மாதங்களில் இந்த தங்கச் சுரங்கத்தில் உள்ள முழு தங்கத்தையும் எடுத்துவிட்டால், பாகிஸ்தான் முற்றிலும் வளர்ந்த நாடுகளில் ஒன்றாக மாறிவிடும் என்றும் கூறப்படுகிறது.