காஷ்மீர் மக்களுக்கு தொடர்ந்து ஆதரவளிப்போம்: பாகிஸ்தான் பிரதமர் அறிவிப்பு.. திருந்தவே மாட்டார்களா?

  காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்த சம்பவம் குறித்து பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷரீஃப் ’இந்த சம்பவத்தில் நடுநிலை விசாரணைக்கு பாகிஸ்தான் தயார்” என்று தெரிவித்தார்.…

pakistan pm

 

காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்த சம்பவம் குறித்து பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷரீஃப் ’இந்த சம்பவத்தில் நடுநிலை விசாரணைக்கு பாகிஸ்தான் தயார்” என்று தெரிவித்தார்.

இது தொடர்பாக காகூல் ராணுவக் கழகத்தில் நடந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர்,
“தண்ணீர் என்பது நம்முடைய உயிரோட்டம். அதைத் தடுக்க அல்லது திசை மாற்ற முயற்சிகள் ஏற்பட்டால், அதற்கு பதிலடி கொடுக்க பாகிஸ்தான் தயார். யாரும் நம்மை மெத்தையாக நினைக்க வேண்டாம்” என்றார்.

பாகிஸ்தான் ராணுவத்திற்கு முழு ஆதரவு இருப்பதாகவும், நாட்டை பாதுகாக்க எந்த நிலையும் எடுத்து கொள்ள தயாராக இருப்பதாகவும் அவர் உறுதிமொழி அளித்தார்.
“அமைதியை விரும்புகிறோம் என்றால், அதற்கு பின்னால் பலவீனம் இருக்கிறது என நினைக்க வேண்டாம்” என்றும் எச்சரிக்கை விடுத்தார்.

பஹல்காம் தாக்குதல் தொடர்பாக ஆதாரமின்றி இந்தியா தொடர்ந்து குற்றம்சாட்டுவதாகவும், இந்த குற்றச்சாட்டு நாடகம் நிறுத்தப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

மேலும், “காஷ்மீர் மக்களுக்கு பாகிஸ்தான் தொடர்ந்து ஆதரவளிக்கும். இந்தியாவில் சிறுபான்மைகள், குறிப்பாக முஸ்லிம்கள் மீதான அநீதிக்கு இந்திய அரசே பொறுப்பு எடுக்க வேண்டும்” என்றும் வலியுறுத்தினார்.

இந்நிலையில், தாக்குதலுக்குப் பின்னர் பாகிஸ்தான் குடியுரிமையாளர்களுக்கு இந்தியா வழங்கிய விசாக்களை ரத்து செய்ததுடன், எல்லைப் பாதுகாப்பையும் அதிகரித்துள்ளது.

பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாத குழுக்களே இப்படிப்பட்ட தாக்குதல்களுக்கு காரணம் என இந்தியா கூறி, சர்வதேச நாடுகள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறது.