பெஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட கொடூர பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு, இந்தியா நேரத்தையும் வீணாக்காமல் அரசியல் மற்றும் பொருளாதார நடவடிக்கைகளை எடுத்தது. பாகிஸ்தான் இந்த தாக்குதலுக்கு தங்கள் நாடு காரணம் இல்லை என மறுத்தாலும், இந்தியா இந்தத் தாக்குதலுக்கு பதிலடியாக சில நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்த நிலையில் இந்தியாவுக்கு பதிலடி என்று பாகிஸ்தான் எடுத்த சில நடவடிக்கைகள் தனக்கு தானே தலையில் மண்ணை வாரி போட்ட நிலையாய் உள்ளது. குறிப்பாக இந்தியாவுடனான வர்த்தக உறவை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. அட்டாரி வாகா வழியாக இரு நாடுகளுக்கு இடையே முக்கியமான வர்த்தக வழியாக இருந்த நிலையில் இந்த வழி முடக்கப்பட்டது. கடந்த ஆண்டில் இந்த வழியில் 3,886 கோடி ரூபாய் மதிப்பில் வர்த்தகம் நடைபெற்ற இனி வர்த்தகம் நடைபெறாது என்பதால் பாகிஸ்தானுக்கு தான் பெரும் இழப்பு.
இந்தியாவுடன் மிக அதிக அளவில் வர்த்தகம் செய்யும் பாகிஸ்தானுக்கு வர்த்தக வழி முடக்கப்பட்டதால் அதன் பொருளாதார பாதிப்புகள் அதிகரிக்கின்றன. 2003-04 ஆம் ஆண்டில் பாகிஸ்தானுக்கு இருந்து இந்தியா செய்யும் ஏற்றுமதிகள் $286.94 மில்லியன் இருந்தது. 2018-19 இல் அது $2.07 பில்லியன் வரை உயர்ந்தது. ஆனால் இனிமேல் ஒரு பைசா கூட வர்த்தகம் நடைபெற வாய்ப்பில்லை. இது பாகிஸ்தானுக்கு பெரும் இழப்பு என கூறப்படுகிறது.
இந்தியாவின் அடுத்தடுத்த அதிரடி நடவடிக்கைகளால் பாகிஸ்தானின் பொருளாதார நிலை மிக மோசமான நிலைக்கு மாறியுள்ளது. அதேபோல் பாகிஸ்தானுக்கு செல்லும் தண்ணீரும் நிறுத்தப்பட்டதால் இன்னும் சில ஆண்டுகளில் பாகிஸ்தான் சோமாலியாவை விட மோசமான நாடாக மாற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
பாகிஸ்தான் உண்மையாகவே தன்னுடைய நாட்டை மேம்படுத்த வேண்டும் என்றால் தன்னுடைய நாட்டு மக்களை வளப்படுத்த வேண்டும் என்றால் முழுக்க முழுக்க தீவிரவாதத்திற்கு ஆதரவு கொடுக்கும் நிலையை நிறுத்திவிட்டு இந்தியாவுடன் நட்பு பாராட்டினால் மட்டுமே முடியும் என்றும் சீனா போன்ற நாடுகளை ஆதரவாக வைத்துக் கொண்டு இந்தியாவை பகைத்து கொள்வதால் பாகிஸ்தான் இன்னும் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் வளர்ச்சி அடையாத நாடாக இருக்கும் என்றும் பொருளாதார வல்லுனர்கள் கூறி வருகின்றன.