முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழக அரசு பொறுப்பேற்று 3 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி கிட்டத்தட்ட 90% வாக்குறுதிகளுக்கு மேலாக நிறைவேற்றி மக்கள் விரும்பும் அரசாகவும், வளர்ச்சிப் பாதையில் முதலிடமாகவும் தமிழ்நாடு திகழ்கிறது.
முதல்வர் ஸ்டாலின் தேர்தல் அறிக்கையில் அறிவித்த முக்கியத் திட்டங்களான மகளிருக்கு ரூ.1000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம், அரசு நகர்ப்புற பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம், 1 முதல் 5-ம் வகுப்பு வரை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் போன்ற பல சீரிய திட்டங்கள் நடைமுறைக்கு கொண்டு வந்து சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி..? மேடையில் போட்டுடைத்த அமைச்சர் ராஜ கண்ணப்பன்
மேலும் அரசுப்பள்ளியில் படித்து உயர்கல்விக்காக கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவியருக்கு புதுமைப் பெண் திட்டம், தமிழ்ப் புதல்வன் திட்டம் போன்ற திட்டங்களும் சிறப்பான வரவேற்பினைப் பெற்று வருகிறது. மேலும் தமிழக அரசின் மற்றொரு திட்டம் தான். உடல் உறுப்பு தானம் செய்வோருக்கு அரசு சார்பில் இறுதி மரியாதை வழங்கப்படும் என்ற நடைமுறை.
உடல் உறுப்பு தானத்தைப் பற்றிய விழிப்புணர்வையும், அதனை ஊக்குவிக்கும் வகையிலும் செயல்படுத்தப்படும் இந்த நடைமுறை ஒருவர் மரணித்தவுடன் அவரது உடல் உறுப்புகள் தானம் செய்யப்படும் நிலையில் அரசு சார்பில் இறுதி மரியாதை வழங்கப்படுகிறது.
அதன்படி தமிழ்நாட்டின் பல இடங்களில் உடல் உறுப்பு தானம் முன்பை விட தற்போது விழிப்புணர்வு அதிகரித்திருக்கிறது. இப்படி பல திட்டங்கள் மூலம் வெளிநாடுகளிலும் பெயர் பெற்றிருக்கிறது தமிழ்நாடு. தற்போது உடல் உறுப்பு தானம் செய்வோருக்கு அரசு சார்பில் இறுதி மரியாதை அளிக்கும் இந்த நடைமுறையினை ஏற்கனவே ஒடிசா மாநிலத்தில் செயல்படுத்தப்பட்டது. தற்போது ஒடிசா மட்டுமின்றி ஆந்திராவிலும் இந்த நடைமுறை செயல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் வெளிநாடுகளில் கூட தமிழக அரசின் காலை உணவுத் திட்டம் போன்றவை செயல்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.