கம்பேக் கொடுத்திருக்கிறாரா டாப் ஸ்டார் பிரசாந்த்? அந்தகன் படம் எப்படி இருக்கு?

By John A

Published:

தமிழ் சினிமாவில் இரண்டாவது இன்னிங்ஸ்-க்கு டாப் ஸ்டார் பிரசாந்த் தயாராகி விட்டார் என்பதை நிரூபித்துக் காட்டியிருக்கும் திரைப்படம் தான் அந்தகன். பாலிவுட்டில் கடந்த 2018-ல் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் தபு, ஆயுஷ்மான் குரானா, ராதிகா ஆப்தே ஆகியோர் நடிப்பில் வெளிவந்து சூப்பர்ஹிட்டான அந்தாதூன் படத்தினை அப்படியே பிசிறு தட்டாமல் பாண்டிச்சேரியை கதைக்களமாகக் கொண்டு தமிழில் இயக்கியிருக்கிறார் பிரசாந்தின் தந்தையும், இயக்குநரும் நடிகருமான தியாகராஜன். நடிகர் பிரசாந்த் திரைக்கு வந்து 35 ஆண்டுகள் கடந்த நிலையில் அந்தகன் அவருக்கு 50-வது படமாக அமைந்திருக்கிறது.

தமிழ் சினிமாவில் இருந்து சில காலம் ஒதுங்கியிருந்த பிரசாந்துக்கு அந்தகன் கம்பேக் கொடுத்திருக்கிறது. பார்வையற்ற மாற்றுத்திறனாளியாக பியானிஸ்ட்டாக நடித்திருக்கும் பிரசாந்த் அந்தக் கதாபாத்திரத்தில் மிரட்டுகிறார். படத்திற்கு இரண்டாவது பெரிய பலம் சிம்ரன். ஏற்கனே சிம்ரன்-பிரசாந்த் ஜோடி கடந்த 20 வருடங்களுக்கு முன்னர் ஜோடி, தமிழ், பார்த்தேன் ரசித்தேன், கண்ணெதிரே தோன்றினாள் என வெற்றிப் படங்களைக் கொடுத்திருக்கின்றனர். இதில் பார்த்தேன் ரசித்தேன் படத்தில் வில்லியாக மிரட்டியிருந்தார் சிம்ரன்.

உதயநிதி ஸ்டாலின் ஆகஸ்ட் 19ம் தேதிக்கு துணை முதல்வர்? ராஜகண்ணப்பன் சொன்ன மேஜர் விஷயம்

தற்போது மீண்டும் அதே போன்றதொரு நெகடிவ் கதாபாத்திரத்தில் மொத்த படத்தினையும் தாங்கிப் பிடிக்கிறார். மேலும் படத்தில் கார்த்திக், பிரியா ஆனந்த், யோகிபாபு, சமுத்திரக்கனி, வனிதா விஜயக்குமார், ஊர்வசி உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். பக்கா க்ரைம் திரில்லராக உருவாகியிருக்கும் அந்தகன் படத்திற்கு இசை சந்தோஷ் நாராயணன். பல நாட்களுக்குப் பிறகு பிரசாந்தை வெள்ளித் திரையில் பார்ப்பதால் அவரது ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

இந்நிலையில் படம் பார்த்தவர்கள் எக்ஸ் தளத்தில் படத்தினைப் பற்றிய கருத்துக்களைப் பதிவிட்டுள்ளனர்.

அந்தகன் பிளாக் பஸ்டர் எனவும், பிரசாந்த் கம்பேக் கொடுத்திருக்கிறார் எனவும், சிம்ரன் வில்லனிசம் சூப்பர் இரண்டாம் பாதி சற்று தொய்வு என ரசிகர் ஒருவர் பதிவிட்டுள்ளார்.

Andhagan

அடுத்ததாக ஓர் சிறப்பான ரீமேக் படம் வந்திருப்பாக Trendswoods கருத்துத் தெரிவித்துள்ளது. அதில் இயக்குநர் தியாகராஜனின் நடிகர்கள் தேர்வு சிறப்பு என்றும், முதல் பாதி பரப்பாகவும் இரண்டாம் பாதி சற்று தொய்வு எனவும், சந்தோஷ் நாராயணனின் இசை படத்திற்கு பலம் எனவும், மேலும் இந்தி அந்தாதுன் பார்க்காதவர்களுக்கு செம கிரைம் திரில்லர் விருந்தாக அமையும் என்றும் தெரிவித்துள்ளது.

Andhagan 2

அந்தகன் படத்திற்கு நாம் வழங்கும் மதிப்பெண்கள் 3.5/5

மேலும் உங்களுக்காக...