மேலும், ராஜ்காட், நமோ கடை, ஜ்ஞானவாபி, ரயில் நிலையம் மற்றும் சிவப்பு கோட்டை உள்ளிட்ட முக்கிய இடங்களின் புகைப்படங்களை பாகிஸ்தானியர்கள் உடன் பகிர்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, பாகிஸ்தானின் தீவிரவாத ஆதரவு அமைப்பான தெஹ்ரிக்-ஏ-லபாயிக் தலைவர் மௌலானா சாத் வீடியோக்களையும், வாட்ஸ்அப் குழுக்களில் பகிர்ந்து வந்துள்ளார்.
தாங்கள் பாபர் மசூதி குறித்து பழிவாங்க வேண்டும் என்றும், இந்தியாவில் ஷரியத் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்றும் தூண்டும் செய்திகளை பரப்பியுள்ளார்.
துஃபைல், வாராணசியில் உள்ள பொதுமக்கள் மற்றும் பாகிஸ்தான் சார்புடைய நெட்வொர்க் இடையே தொடர்பு ஏற்படுத்தும் வகையில் வாட்ஸ்அப் குழுக்களின் இணையதள இணைப்புகளை பரப்பியதாகவும் தெரியவந்துள்ளது.
மேலும், நஃபிசா என்ற பாகிஸ்தான் பெண்ணுடன் இவர் தொடர்பில் இருந்தார். நஃபிசாவின் கணவர் பாகிஸ்தான் ராணுவத்தில் பணியாற்றுவதாக கூறப்படுகிறது. துஃபைல், சுமார் 600 பாகிஸ்தானியர்களுடன் தொடர்பில் இருந்ததாக சந்தேகிக்கப்படுகிறது.
துஃபைலின் முழுமையான செயல்பாடுகள் மற்றும் நெட்வொர்க் குறித்து உபி காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது. இந்த விவகாரம், சமூக ஊடகங்களை பயன்படுத்தி நடக்கும் டிஜிட்டல் உளவு நடவடிக்கைகள் மற்றும் தீவிரவாத வலையமைப்புகள் குறித்து அச்சத்தை உருவாக்கியுள்ளது.