ஜூலை 5ல் வெளியாகிறது Nubia Red Magic 8S Pro.. இந்தியாவில் கிடைக்குமா?

Published:

Nubia நிறுவனம் அவ்வப்போது புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை உலகம் முழுவதும் அறிமுகம் செய்து வருகிறது என்பதும் இந்நிறுவனத்தின் ஸ்மார்ட் ஃபோன்கள் பயனர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் ஜூலை 5ஆம் தேதி Nubia நிறுவனம் புதிய மாடல் ஸ்மார்ட் போன் ஒன்றை அறிமுகம் செய்ய உள்ளது. முதல் கட்டமாக இந்த போனை சீனாவில் அறிமுகம் செய்ய இருப்பதாகவும் படிப்படியாக அனைத்து நாடுகளிலும் அறிமுகம் செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது

இந்தியாவில் இந்த போன் அறிமுகமாக இன்னும் சில மாதங்கள் ஆகும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த புதிய ஸ்மார்ட் போன் மாடல் குறித்த தகவல்கள் கசிந்து உள்ள நிலையில் அவை என்னென்ன என்பதை தற்போது பார்ப்போம்

Nubia நிறுவனம் ஜூலை 5ஆம் தேதி தனது புதிய தயாரிப்பான Red Magic 8S Pro என்ற மாடல் ஸ்மார்ட்போனை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இது Snapdragon 8 Gen 2 பிராஸசர் கொண்டது என்பதும், 24GB வரை ரேம் கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது.

Nubia Red Magic 8S Pro ஸ்மார்ட்போனின் சில முக்கிய தகவல்களை தற்போது பார்ப்போம்.
* 6.8-இன்ச் AMOLED டிஸ்ப்ளே 1080 x 2400 பிக்சல் ரெசலூசன்
* ஸ்னாப்டிராகன் 8 ஜெனரல் 2 பிராஸசர்
* 24 ஜிபி வரை ரேம்
* 1TB வரை இண்டர்னல் ஸ்டோரேஜ்
* 50MP பிரதான கேமரா, 8MP அல்ட்ராவைடு கேமரா, 2MP மேக்ரோ கேமரா
* 16MP செல்பி கேமரா
* 6000mAh பேட்டரி:

Nubia Red Magic 8S Pro சீனாவில் அறிமுகத்தில் கிடைக்கும் என்றும், மற்ற நாடுகளில் இந்த போன் எப்போது கிடைக்கும் என்பது இன்னும் தெரியவில்லை என்றும் தெரிகிறது.

மேலும் உங்களுக்காக...