பெடிக்யூர் செய்ய இந்த 4 பொருட்கள் போதும்… இனி வீட்டிலேயே செய்யலாம் பெடிக்யூர்…!

Published:

பெடிக்யூர் என்பது பாதங்களை பராமரிப்பதற்காக உதவும் ஒரு சிகிச்சை முறையாகும். பெடிக்யூர் காக அழகு நிலையங்களில் 500 முதல் 1500 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

பெரும்பாலும் அனைவரும் முகம், கூந்தல் இவற்றிற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை பாதங்களுக்கு கொடுக்க மறந்து விடுகிறார்கள்.

istockphoto 1384893129 612x612 1

பாதங்களை பராமரிப்பதன் அவசியம் அழகுக்காக மட்டும் இல்லை நோய் இல்லாமல் இருப்பதற்காகவும் தான். பாதங்களை சுத்தமாக வைத்திருந்தால் தேவையற்ற பூஞ்சை தொற்றுகளுக்கு உள்ளாகாமல் நோயின்றி இருக்கலாம். மேலும் பெடிக்யூர் செய்வதன் மூலம் மன அழுத்தம் குறைவதாக பல தெரிவிக்கின்றார்கள்.

பெண்களே… உங்க வீட்ல பால் இருக்கா? அப்போ பார்லரே செல்ல தேவையில்லை…!

பெடிக்யூர் செய்வதற்கு தேவையான பொருட்கள்:

feet 7861 1280

  1. எலுமிச்சை பழம் – 1/2
  2. கல் உப்பு – 2 ஸ்பூன்
  3. ஷாம்பு – 1 சாஷே
  4. தேங்காய் எண்ணெய் – சிறிதளவு
பெடிக்யூர் செய்யும் முறை:

முதலில் உங்கள் கால் நகங்களில் ஏதேனும் நெயில் பாலிஷ் போட்டிருந்தால் அதனை நெயில் பாலிஷ் ரிமூவர் கொண்டு நீக்கி விடவும்.

பிறகு கால்களை வைக்கும் அளவுக்கு உள்ள டப்பில் வெதுவெதுப்பான நீரினை ஊற்றிக் கொள்ளவும்.

பின் அந்த நீரில் எலுமிச்சை சாறு, கல் உப்பு, சிறிதளவு ஷாம்பு ஆகியவற்றை போடவும்.

நெயில் பாலிஷை ரிமூவ் செய்த பிறகு உங்கள் பாதங்களை அந்த  தண்ணீரில் வைத்து 20 நிமிடங்கள் வரை ரிலாக்ஸ் செய்து கொள்ளவும்.

feet 931921 1280

20 நிமிடங்களுக்கு பிறகு உங்கள் பாதத்தை பிரஷ் கொண்டோ அல்லது பாதங்களை தேய்ப்பதற்கெனவே கற்கள் உள்ளன அது கொண்டு நன்கு தேய்க்கவும். இது கால்களில் உள்ள இறந்த செல்களை நீக்கிட உதவுகிறது. ஒரு சிறிய பிரஷ் கொண்டு நகங்களின் ஓரம் விரல்களுக்கு இடையே என நன்கு தேய்த்து விடவும்.

இப்பொழுது கால்களில் உள்ள நகங்களை உங்களுக்கு விருப்பமான வடிவில் சீராக வெட்டி விடவும்.

பாதங்களை ஒரு மென்மையான துண்டினால் துவட்டிய பிறகு தேங்காய் எண்ணெய் கொண்டு காலினை மாய்சரைஸ் செய்து கொள்ளவும்.

பெடிக்யூருக்கு தயார் செய்த தண்ணீரில் வாசனைக்காக திரவியங்களோ, ரோஜா இதழ்களோ விருப்பப்பட்டால் சேர்த்துக் கொள்ளலாம். இந்த பெடிக்யூரை தொடர்ந்து செய்வதால் பித்த வெடிப்பு, பூஞ்சை தொற்று, கால் ஆணி போன்ற தொல்லைகளிலிருந்து நிரந்தரமாக விடுதலை பெறலாம்.

மேலும் உங்களுக்காக...