ரயில் பயணிகளுக்கு நற்செய்தி… இனி பணம் இல்லாமல் டிக்கெட் புக் செய்யலாம்… அது எப்படி தெரியுமா…?

தினமும் லட்சக்கணக்கான மக்கள் ரயிலில் பயணம் செய்து கொண்டு இருக்கிறார்கள். ரயில் பயணம் என்பது அனைவருக்கும் விருப்பமான ஒன்றாக இருக்கும். ஏனென்றால் மலிவான விலையில் சௌகரியமான பயணமாக அது இருக்கிறது. பயணிகளின் வசதிக்கேற்ப இந்திய…

irctc

தினமும் லட்சக்கணக்கான மக்கள் ரயிலில் பயணம் செய்து கொண்டு இருக்கிறார்கள். ரயில் பயணம் என்பது அனைவருக்கும் விருப்பமான ஒன்றாக இருக்கும். ஏனென்றால் மலிவான விலையில் சௌகரியமான பயணமாக அது இருக்கிறது. பயணிகளின் வசதிக்கேற்ப இந்திய ரயில்வே பல புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அதில் ஒன்றுதான் தற்போது பயணிகள் பணம் இல்லாமல் கூட டிக்கெட்டை புக் செய்து கொள்ளலாம். அதன் விவரங்களை பற்றி இனி காண்போம்.

மிகவும் அவசரமான நிலையில் டிக்கெட் புக் செய்வோர் பணத்தை கிரெடிட் செய்ய முடியாமல் திணறுவோர் ஆகியோருக்காக இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டிருக்கிறது. நீங்கள் வழக்கமாக டிக்கெட் புக் செய்யும் வலைத்தளத்தில் இருந்து Book Now Pay Later ஆப்ஷனை தேர்ந்தெடுப்பதன் மூலம் நீங்கள் டிக்கெட் புக் செய்து பின்னர் கட்டணத்தை செலுத்திக் கொள்ளலாம்.

இந்த Book Now Pay Later ஆப்ஷனில் டிக்கெட் புக் செய்த நேரத்தில் இருந்து 14 நாட்களுக்குள் நீங்கள் கட்டணத்தை செலுத்த வேண்டும். நீங்கள் குறிப்பிட்ட நேரத்தில் கட்டணத்தை செலுத்தாவிட்டால் 3.5 சதவீதம் சேவை கட்டணமாக பிடித்தம் செய்யப்படும். நீங்கள் IRCTC இணையதளத்தில் வழக்கம்போல டிக்கெட்டை புக் செய்து Book Now Pay Later ஆப்ஷனுக்குள் செல்லும்போது உங்களுக்கான விருப்பத்தை தேர்ந்தெடுத்து கொள்ளலாம. இந்த திட்டம் ரயில்வே பயணிகள் இடையே வரவேற்பை பெற்றிருக்கிறது.