மைக்ரோசாப்ட் பிரச்சினையால் பாதிக்கப்படாத 2 நாடுகள்.. இந்திய பங்குச்சந்தையிலும் பாதிப்பில்லை..!

Published:

சமீபத்தில் ஏற்பட்ட மைக்ரோசாப்ட் பிரச்சனை காரணமாக உலகம் முழுவதும் பெரும் பாதிப்பு ஏற்பட்ட நிலையில் இரண்டு முக்கிய நாடுகளில் மட்டும் எந்த விதமான பாதிப்பும் இல்லை என்று கூறப்படுகிறது, அது தான் சீனா மற்றும் ரஷ்யா.

மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் கிரவுட் ஸ்டிரைக் என்ற மென்பொருள் சைபர் பாதுகாப்பை உறுதி செய்யும் நிலையில் சமீபத்தில் இந்த மென்பொருள் அப்டேட் செய்யப்பட்டது. இதில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக தான் உலகம் முழுவதும் மைக்ரோசாப்ட் திடீரென முடங்கியது என்பதும் இதனால் விமான சேவைகள், வங்கி சேவைகள், பங்குச்சந்தைகள் என அனைத்து சேவைகளும் முடங்கியதாக செய்திகள் வெளியாகின.

இந்த பிரச்சனை காரணமாக அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, ஜப்பான், மலேசியா, நியூசிலாந்து உட்பட உலகின் முன்னணி நாடுகளில் விமானம், ரயில், வங்கி, பங்குச்சந்தை ஆகிய சேவைகள் பாதிக்கப்பட்ட நிலையில் ரஷ்யா மற்றும் சீனாவில் மட்டும் எந்தவிதமான பாதிப்பும் இல்லை என்று கூறப்படுகிறது.

இந்த இரண்டு நாடுகளிலும் கிரவுண்ட் ஸ்ட்ரைக் என்ற மென்பொருள் பயன்படுத்துவதில்லை என்றும் தங்கள் சொந்த நாட்டில் உள்ள சைபர் பாதுகாப்பு மென்பொருள் தான் பயன்படுத்தப்பட்டதால் இந்த இரண்டு நாடுகளுக்கும் எந்த விதமான பாதிப்பும் இல்லை என்றும் கூறப்படுகிறது.

அதேபோல் இந்திய பங்குச் சந்தையில் செபி அமைப்பு இந்த மென்பொருளை பயன்படுத்தவில்லை என்பதால் இந்திய பங்குச் சந்தைக்கும் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படவில்லை. வெகு சிலருக்கு மட்டுமே சின்ன பாதிப்பு ஏற்பட்டதாகவும் அதுவும் உடனடியாக சரி செய்து விட்டதாகவும் செபி அமைப்பு தெரிவித்துள்ளது.

மேலும் உங்களுக்காக...