சில பெண்கள் தங்களுடைய கணவரையும் தாண்டி ஒருசில காரணங்களுக்காக பணம் கொடுத்து பாலியல் சேவைகளை பெறுகிறார்கள் என்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெரும்பாலும் மேலை நாடுகளில் தற்போது இந்த கலாச்சாரம் அதிகரித்து வருகிறது.
“நீங்கள் எப்போதாவது பணம் கொடுத்து செக்ஸ் வைத்துக் கொண்டிருக்கிறீர்களா?” என்று ஒரு தனியார் நிறுவனம் கருத்துக்கணிப்பு எடுத்தபோது அதில் கிடைத்த பதில்கள் பலருக்கு ஆச்சரியப்படுத்தின.
41 வயது பெண் ஒருவர் தொழிலதிபராக உள்ளார். அடிக்கடி வெளியூர் பயணம் செய்கிறார். “எனக்கு ரிலாக்ஸ் ஆக செக்ஸ் தேவை. என் கணவரை மதிக்கிறேன், அவருடனும் உறவு கொள்கிறேன். ஆனால், வெளியூர் பயணங்களில் என் கணவரை மிஸ் செய்கிறேன், அப்போது என் தேவைகளை பூர்த்தி செய்யவும் பணம் கொடுத்து உறவு கொள்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.
இதற்காகவே சில ஏஜென்சிகள் இருப்பதாகவும், நான் என்ன விரும்புகிறேன் என்று கேட்டு எனது விருப்பத்திற்கேற்ற ஆண்களை அனுப்புவார்கள் என்றும், என்னிடம் வரும் ஆணிடம் சில அறிவுறுத்தல்கள் கொடுப்பேன். உறவு முடிந்ததும், அவர்கள் உடனே கிளம்பிவிடுவார்கள். என்னைப் பற்றி அவர்களுக்கு தெரிய வேண்டாம் என்று ஏஜென்சியிடம் கேட்டு கொள்வேன். மேலும் ஒரே ஆளுடன் இரண்டு முறை உறவு கொள்வதில்லை என்பது என் விதி. எனக்கு எந்தக் குற்ற உணர்வும் இல்லை” என்கிறார்.
இன்னொரு பெண் 18 வருடத் திருமண வாழ்க்கையில் இருப்பதாகவும், என் கணவரை நான் காதலிக்கிறேன், ஆனால் உறவுக்காக மட்டும் நான் அவரை திருமணம் செய்யவில்லை. அவர் ஒரு சிறந்த தந்தை, நல்ல துணை என்பதால் தேர்ந்தெடுத்தேன். ஆனால், தனிமையிலிருந்தபோது எனக்கு வேறொரு ஆண் உறவுக்கு தேவைப்பட்டார்.
அதனால், ஒரு ஆண் துணையை தேடலாம் என்று தோன்றியது. இது ஒரு தொழில்முறை விஷயம் போல. உடலை கவனித்துக் கொள்ள பயிற்சியாளரை நியமிப்பது போல, என் உடல் தேவைகளுக்கு ஒருவரை நியமித்தேன். அவருக்கு ரகசியத்தன்மைக்காகவே பணம் கொடுத்தேன்’ என்று கூறுகிறார்.
ஆண்கள் வெளியூர் செல்லும்போது பாலியல் உறவுக்கு பெண்களை தேடி கொள்வார்கள், ஆனால் மனைவி குழந்தைகளிடம் பாசமாக இருப்பார்கள், அதுபோல் தான் நாங்களும் வெளியூருக்கு வாரக்கணக்கில், மாதக்கணக்கில் செல்லும்போது எங்கள் உடல் தேவையை பணம் கொடுத்து பூர்த்தி செய்கிறோம்’ என்று எந்தவித குற்ற உணர்ச்சியும் இல்லாமல் பெண்கள் கூறுகின்றனர். கலாச்சாரம் மாறி வருகிறது. கற்பு என்பது கேலிக்குரியதாகி வருகிறது என்று இதுகுறித்து நெட்டிசன்கள் கருத்து கூறி வருகின்றனர்.