2025 ல் இருந்து உருவாகும் புதிய தலைமுறை.. Gen Alpha, Gen Z வரிசையில் புது ட்ரெண்ட்.. கூடவே ஒரு பாதிப்பும் இருக்கு..

தற்போதுள்ள காலகட்டத்தில் அனைத்திலுமே டிரெண்ட் என்ற வட்டத்திற்குள் மிக எளிதாக வந்து விடுகிறது. ஒரு காலத்தில் எல்லாம் நமது தாத்தா, பாட்டிகள் வாழ்ந்த சமயத்தில் ஒரு நாள் பொழுது போவதற்கு கதைகள் பேசிக் கொண்டும்,…

Gen Beta from 2025

தற்போதுள்ள காலகட்டத்தில் அனைத்திலுமே டிரெண்ட் என்ற வட்டத்திற்குள் மிக எளிதாக வந்து விடுகிறது. ஒரு காலத்தில் எல்லாம் நமது தாத்தா, பாட்டிகள் வாழ்ந்த சமயத்தில் ஒரு நாள் பொழுது போவதற்கு கதைகள் பேசிக் கொண்டும், திரைப்படங்கள் பார்த்துக் கொண்டும் மொபைல், இணையம் இல்லாத காலத்தை பொற்காலம் போல கழித்து வந்தார்கள்.

அதன் பின்னர் தொழில்நுட்ப வளர்ச்சி உருவாக தொடங்க, 1990 களுக்கு பின்னர் இருந்த காலகட்டம் அப்படியே அனைத்திற்கும் வேறொரு பரிமாணமாக அமைந்திருந்தது. இளைஞர்கள் பலரும் மொபைல் போனை பார்த்துக் கொண்டிருந்தாலே வயதான பலருக்கும் அது எரிச்சலை கொடுப்பதுடன், ‘அந்த காலத்துல எல்லாம் எப்படி இருந்தோம் தெரியுமா. ஆரோக்கியமாக ஓடி விளையாடிகிட்டு திரிஞ்சனால தான் இந்த வயசில தெம்பா இருக்கோம்’ என கூறுவார்கள்.

Gen Beta தலைமுறை..

ஆனால், 90 ஸ் கிட்ஸாக இருக்கும் பலரையே தற்போதுள்ள தலைமுறையினர் வயதானவர்கள் போல உணர வைக்கும் அளவுக்கு பள்ளிக்காலம் முடிவதற்குள் சமூக வலைத்தளங்களில் என்னென்னவோ செய்து கொண்டிருக்கிறார்கள். இதற்கு மத்தியில், 90்ஸ் கிட்ஸ், 2கே கிட்ஸ் என குறிப்பிடுவதற்கு பதிலாக மனிதர்கள் வரலாற்றை கிரீக் எழுத்துக்களில் தற்போது குறிப்பிட்டு வருகிறார்கள். அந்த வகையில், 1981 முதல் 1996 க்குள் பிறந்தவர்கள் Millenials என்றும், 1996 முதல் 2010 வரை பிறந்தவர்கள் Gen Z என்றும், 2010 முதல் 2024 வரை பிறந்தவர்கள் Gen Alpha என்றும் குறிப்பிடப்பட்டு வருகின்றனர்.

இதில் Gen Alpha என்ற பெயரில் இந்த காலத்தில் உள்ள இளைஞர்கள் பலரையும் தொடர்புபடுத்தி நிறைய மீம்ஸ்களும் கூட பகிரப்பட்டு வரும். அப்படி ஒரு சூழலில், 2025 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி முதல் பிறக்கும் குழந்தைகள் Generation Beta என்றும் குறிப்பிடப்படுவார்கள். 2025 முதல் 2039 வரை பிறந்தவர்கள் இப்படி அழைக்கப்படுவார்கள் என்றும் Gen Alpha, Gen Z ஆகியோரின் வாரிசுகளாக இவர்கள் இருப்பார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

16 சதவீதம் அவங்க தான்..

மேலும், 2035 ஆம் ஆண்டில் உலக மக்கள் தொகையில் 16 சதவீதம் பேர் Gen Beta காலகட்டத்தில் பிறந்தவர்களாக இருப்பார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்த பீட்டா தலைமுறை, AI மூலம் அன்றாட வாழ்க்கை, கல்வி, சுகாதாரம், பொழுதுபோக்கு என அனைத்திலும் நிரம்பி இருப்பது போல வாழ்வார்கள் என தெரிவிக்கப்படுள்ளது.

சமூக வலைத்தளத்தால் Gen Alpha தலைமுறையே நிஜ வாழ்க்கையில் இருந்து மாறுபட்டு சமூக வலைத்தளம் என்ற வேறொரு உலகத்தில் வாழ்ந்து வரும் சூழலில், Gen Beta தலைமுறை எப்படி இருக்க போகிறது என்பதே பெரிய கேள்வி தான்.