“பத்த வச்சுட்டியே பரட்டை” சிரிப்பு ராஜ்ஜியத்தின் அரசன்…. கவுண்டமணியை ஒதுக்கிய பிரபலங்கள்…. என்ன காரணம் தெரியுமா….?

Published:

தமிழ் சினிமா உலகை கால் நூற்றாண்டு காலம் தனது சிரிப்பு ராஜ்யத்தால் ஆட்சி செய்தவர் கவுண்டமணி. சுப்பிரமணி என்ற பெயருடைய இவர் தனது 15 வயதில் நாடகத்தில் நடிப்பேன் என்று அடம்பிடித்ததால் சகோதரியால் சென்னைக்கு அழைத்துவரப்பட்டு நாடக சபா ஒன்றில் சேர்த்து விடப்பட்டுள்ளார்.

goundamani

கவுண்டர் மன்னன் 

சுப்பிரமணியிடம் இருந்த கவனிக்கத்தக்க ஒன்று யார் என்ன பேசினாலும் அதற்கு உடனடியாக அவர் கவுண்டர் கொடுப்பார். இதனால் அவரிடம் பேசுபவர்களே விழுந்து விழுந்து சிரிக்க துவங்கி விடுவர். அப்படி கவுண்டர் கொடுத்து தான் சுப்பிரமணி கவுண்டமணி ஆனார். கவுண்டமணி அவர்கள் பேசினாலே அது நக்கல் நையாண்டியாக தான் இருக்கும் என்று பலருக்கும் தெரியும்.

ஆனால் அவர் தனது முதல் படமான நாகேஷ் நடிப்பில் வெளிவந்த சர்வர் சுந்தரத்தில் ஒரு வார்த்தை கூட பேசாமல் வசனம் இன்றி கூட்டத்தில் ஒருவராக வந்து செல்வார். அதற்கு அடுத்ததாக ரஜினி கமலுக்கு திருப்புமுனையாக அமைந்த பாரதிராஜாவின் 16 வயதினிலே திரைப்படம் தான் கவுண்டமணியையும் நக்கல் நையாண்டியாக ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியது.

அந்த படத்தில் கவுண்டமணி அவர்கள் “பத்த வச்சிட்டியே பரட்டை” என்று சொன்ன டயலாக் இன்றளவும் உபயோகிக்கப்படும் ஒன்றாக உள்ளது. அதன் பிறகு சுவரில்லா சித்திரம் திரைப்படத்தில் டெய்லர் கல்யாணம் கதாபாத்திரத்தில் நடித்து தனக்கென்று தனி முத்திரையை பதித்தார்.

பிரபலங்கள் ஒதுக்கிய கவுண்டமணி 

படங்களில் கவுண்டர் கொடுப்பது மட்டுமல்லாது படப்பிடிப்பு தளத்திலும் யார் என்ன பேசினாலும் இவர் கவுண்டர் கொடுத்து அந்த இடத்தையே கலகலப்பாக வைத்திருக்க கூடியவராம். அதேபோன்று படபிடிப்பின் போது இவருக்கு கொடுக்கப்பட்ட வசனங்களுடன் சேர்த்து அந்த இடத்தில் அவருக்கு தோன்றும் கவுண்டர்களையும் சேர்த்து அடித்து விடுவாராம். பின்னாளில் அவர் அடித்து விட்ட அந்த கவுண்டர்கள் பிரபலமாக பதிவாகிவிடும்.

1015506

இப்படி நகைச்சுவையில் சிறந்து விளங்கிய கவுண்டமணியை திரைத்துறை ஒரு கட்டத்தில் ஒதுக்கியது. காரணம் அவர் படப்பிடிப்பு தளத்தில் அனைவருக்கும் கவுண்டர் கொடுத்தது தான். அது முன்னணி நடிகர்களின் ஈகோவை தூண்டியதால் கவுண்டமணி வேண்டாம் என சிலர் நிராகரித்துள்ளனர்.

10 வருடங்கள் கழித்து….. மீண்டும் இரட்டை வேடத்தில் நடிக்கும் ரஜினிகாந்த்….!!

கவுண்டமணி – செந்தில் கூட்டணி 

1984 ஆம் வருடம் வைதேகி காத்திருந்தாள் திரைப்படத்தின் மூலம் கவுண்டமணியுடன் மற்றும் ஒரு காமெடி நடிகர் இணைகிறார். அது ஈடில்லா கூட்டணியாக அமைந்து பின்னாளில் அவர்கள் இருவரும் படத்தில் வேண்டும் என முன்னணி பிரபலங்களே கோரிக்கை வைத்தனர். அதுதான் கவுண்டமணி-செந்தில் கூட்டணி.

Senthil Goundamani

இவர்கள் இருவர் இருந்தால் படம் கலகலப்பாக தான் செல்லும் என ரசிகர்கள் உறுதியாக நம்பினர். இப்படி ரசிகர்கள் மத்தியில் பிரபலமான கவுண்டமணிக்கு பேட்டி கொடுக்கவோ புகைப்படம் எடுக்கவோ சுத்தமாக பிடிக்காதாம். ஏதேனும் செய்தியாளர்கள் பேட்டி எடுக்க முயற்சித்தால் நான் பேட்டி கொடுத்து என்ன ஆகிறப்போகுது என்று கூறிவிட்டு நைசாக அவ்விடத்தை விட்டு நகர்ந்து விடுவாராம்.

90களின் இறுதியில் உடல் நல பாதிப்புகள் ஏற்பட்டதை தொடர்ந்து கவுண்டமணி திரைப்படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டார். அதன் பிறகு சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்த கவுண்டமணி அவர்கள் குணச்சித்திர நடிகராகவாவது தொடர்ந்து பயணிக்க வேண்டும் என்பதை ரசிகர்களின் எண்ணமாக உள்ளது.

மேலும் உங்களுக்காக...