10 வருடங்கள் கழித்து மீண்டும் இரட்டை வேடத்தில் நடிக்கும் ரஜினிகாந்த்!

ரஜினிகாந்த் நடித்த ஜெய்லர் படம் கடந்த மாதம் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பல சாதனைகள் படைத்து வருகிறது. இந்த திரைப்படம் வெளியான முதல் நாளே 100 கோடி வசூல் ஈட்டியதாக தகவல்கள் வெளியானது. அதை தொடர்ந்து ஜெயிலர் திரைப்படம் தற்பொழுது உலக அளவில் 550 கோடிக்கு மேல் வசூலில் சாதனை படைத்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்தின் அடுத்த படம் பற்றிய அப்டேட்டுகள் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளன. அதன்படி இந்த ஆண்டு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லால் சலாம் படம் வெளியாக உள்ளது. கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகி இருக்கும் இந்த படத்தில் கேமியோவாக ரஜினி நடித்துள்ளார். லைகா ப்ரொடெக்‌ஷன் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.

அடுத்ததாக லைக்கா ப்ரொடெக்க்ஷன் தயாரிப்பில் ஜெய் பீம் இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் தலைவர் 170 படத்தில் ரஜினிகாந்த் ஒப்பந்தமாகியுள்ள நிலையில் இப்படத்தின் சூட்டிங் குறித்த அப்டேட்களுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்து வருகின்றனர்.

இந்த படத்தில் முஸ்லீம் போலீஸ் அதிகாரியாக ரஜினி நடிக்க உள்ளதாகவும், படத்தில் போலி என்கவுண்டர்களை கண்டறியும் அதிகாரியாக ரஜினி களமிறங்க உள்ளார். மேலும் பகத் பாசில் வில்லனாக நடிக்க உள்ளதாகவும், அவருக்கு 8 கோடி சம்பளமாக பேசப்பட்டுள்ளதாகவும் சமீபத்தில் தகவல் வெளியானது. அடுத்ததாக படத்தில் அமிதாப் பச்சன், பாகுபலி வில்லன் ராணா , துசாரா விஜயன் என பல முன்னணி நடிகர் நடிக்க உள்ளதாக திரைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் செப்டம்பர் 19 ஆம் தேதி தொடங்க உள்ளதாகவும், முதல் பகுதியில் தொடர்ந்து 10 நாட்கள் நடத்த உள்ளதாக திட்டமிட்டுள்ளது. இந்த படங்களை தொடர்ந்து ரஜினி பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் படத்தில் நடிக்க உள்ளதாகவும் ஒரு புறம் கூறப்படுகிறது.

வாரிசு நடிகர் பேச்சு என்னோடு போகட்டும்.. லைக்கா நிறுவனத்திற்கு விஜய் போட்ட கண்டிஷன்!

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தனது 171வது படத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் கைகோர்க்க உள்ளதாக கடந்த சில நாட்களாக தகவல் வெளியாகி வருகின்றன. இந்த படத்தில் நடிகர் ரஜினிகாந்த் இரட்டை வேடங்களில் நடிப்பதாக கூறப்படுகிறது. இதுவரை பார்த்திராத வித்தியாசமான கெட்டப்பில் ரஜினி படத்தில் தோன்ற உள்ளதாகவும் கோலிவுட் வட்டாரத்தின் தகவல் வெளியாகி வருகின்றன.

இதற்கு முன்னதாக ரஜினிகாந்த், கே.எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் லிங்கா படத்தில் இரட்டை வேடத்தில் நடித்திருப்பார். 10 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது அவர் மீண்டும் இரட்டை வேடங்களில் நடிக்க இருப்பதாக பகிரப்படும் தகவல் ரஜினிகாந்த் ரசிகர்களை பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...