இன்று இந்தியாவில் வெளியாகிறது Motorola Razr 40.. விலை இதுதான்..!

By Bala Siva

Published:

ஸ்மார்ட்போன் தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் Motorola நிறுவனத்தின் Motorola Razr 40 என்ற மாடல் ஸ்மார்ட்போன் ஜூலை 4ஆம் தேதி வெளியாக இருப்பதாக செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இன்று இந்த போன் வெளியாக இருக்கும் நிலையில் இந்திய அளவில் டிரெண்டாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த போனின் அதிகாரபூர்வ விலை குறித்த தகவலும் வெளியாகி உள்ளது.

இந்தியாவில் மோட்டோரோலா Razr 40 சீரிஸ் விலை Motorola Razr 40 ரூ.59,999 என்றும், ஐசிஐசிஐ கிரெடிட் கார்டு மூலம் ரூ.5,000 சலுகை விலையில் கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ஐசிஐசிஐ கிரெடிட் கார்டு மூலம் இந்த போனை ரூ.54,999க்கு வாங்கலாம்.

அதேபோல் Motorola Razr 40 Ultra ஸ்மார்ட்போனின் விலை ரூ.89,999 என்றும், ஐசிஐசிஐ கார்டு மூலம் வங்கி மூலம் வாங்கினால் ரூ.7000 தள்ளுபடி விலையில் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ஐசிஐசிஐ கிரெடிட் கார்டு மூலம் இந்த போனை ரூ.84,999க்கு வாங்கலாம்.

Motorola Razr 40 மற்றும் Razr 40 Ultra ஆகியவை இந்தியாவில் ஜூலை 4, 2023 அன்று அறிமுகப்படுத்தப்பட்டன. Razr 40 இன் விலை ₹59,999, Razr 40 Ultra விலை ₹89,999. இரண்டு போன்களும் அமேசான் இந்தியா மூலம் வாங்கலாம்.

Motorola Razr 40 ஸ்மார்ட்போன் Snapdragon 8 Gen 1 பிராஸசர் மூலம் இயக்கப்படுகிறது. 6.7-இன்ச் OLED டிஸ்ப்ளே கொண்டுள்ள இந்த போனில் 50MP பிரதான கேமரா, 13MP அல்ட்ராவைடு கேமரா மற்றும் 32MP செல்பி கேமராவையும் கொண்டுள்ளது.

Motorola Razr 40 Ultra ஸ்மார்ட்போன் Snapdragon 8+ Gen 1 பிராஸசர் மூலம் இயக்கப்படுகிறாது. 6.7-inch OLED டிஸ்ப்ளே கொண்டுள்ள இந்த போனில் 50MP பிரதான கேமரா, 13MP அல்ட்ராவைடு கேமரா, 12MP டெலிஃபோட்டோ கேமரா மற்றும் 60MP செல்பி கேமரா ஆகியவற்றையும் கொண்டுள்ளது.

இரண்டு போன்களும் 2800mAh பேட்டரி மற்றும் 15W ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சங்கள் உள்ளன. இரண்டுமே ஆண்ட்ராய்டு 13ல் இயங்குகின்றன.

சக்திவாய்ந்த பிராஸசர் மற்றும் உயர்தர டிஸ்ப்ளே கொண்ட மடிக்கக்கூடிய தொலைபேசியை நீங்கள் தேடுகிறீர்கள் என்றால் பிராஸசர் Motorola Razr 40 அல்லது Motorola Razr 40 Ultra ஆகிய இரண்டுமே உங்களுக்கு பொருத்தமான போன்களாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.