பிரபல யூடியூபரை நம்பி களமிறங்கும் நயன்தாரா! ரசிகர்களுக்கு மாஸ் அப்டேட்!

தமிழ், தெலுங்கு,ஹிந்தி என பல மொழிகளில் பிசியாக நடித்து வரும் நயன்தாரா அடுத்ததாக பிரபல யூடியூபர் படத்தில் நடிக்க உள்ளார் என்ற தகவல் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

தென்னிந்திய திரையுலகில் லேடிஸ் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நயன்தாரா. இவர் நடிப்பில் ஏராளமான படங்கள் உருவாகி வருகின்றன. தற்போது நயன்தாரா நடித்துள்ள முதல் ஹிந்தி படமான ஜவான் படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்துள்ளார். அட்லி இயக்கத்தில் இந்த படம் தற்போழுது ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

இதை அடுத்து என்றென்றும் புன்னகை, மனிதன் போன்ற படங்களை இயக்கிய அகமத் இயக்கத்தில் இறைவன் திரைப்படம் திரைக்கு வரவுள்ளது. இது மட்டுமல்லாமல் ஜெயம் ரவியுடன் ஒரு படமும், இயக்குனர் சங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய நிலேஷ் கிருஷ்ணாவின் படத்திலும், அடுத்ததாக இயக்குனர் ரத்னகுமார் இயக்கத்திலும் நடிக்க உள்ளார்.

இப்படி வரிசையாக படங்களில் கமிட் ஆகி வரும் நயன்தாரா தற்போது மேலும் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

புது லுக்கில் ரசிகர்களுக்காக மீண்டும் களமிறங்கும் லெஜண்ட் சரவணன்! தெறிக்க விடும் அப்டேட்!

dude vicky

இப்படத்தை பிரண்ட்ஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் கதாநாயகியை மையமாக வைத்து உருவாக உள்ள இந்த திரைப்படத்தை பிரபல யுடியூபரான ட்யூட் விக்கி (Dude vicky) இயக்க உள்ளார். நடிகை நயன்தாரா ட்யூட் இயக்கத்தில் நடிக்க உள்ளது என்பது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இப்படத்தின் மூலம் அவர் இயக்குனராக அறிமுகமாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பெண்களை மையப்படுத்தி வரும் கதைகளுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்ந்தெடுத்து நடிக்கும் நயன்தாராவிற்கு ரசிகர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.