தினமும் ரூ.70 லட்சத்திற்கு ஷாப்பிங் செய்யும் பெண்.. கணவர் ஒன்றும் சொல்ல மாட்டாரா?

Published:

துபாயை சேர்ந்த பெண் ஒருவர் தினமும் 70 லட்ச ரூபாய் ஷாப்பிங் செய்வதாகவும் இதற்கு அவரது கணவரும் ஒத்துழைப்பு தருவதாகவும் கூறப்படுகிறது.

இந்தியாவின் முன்னணி பணக்காரர்களான அம்பானி, அதானி குடும்பத்தின் பெண்கள் கூட தினமும் 70 லட்ச ரூபாய் செலவு செய்வார்களா என்பது சந்தேகம் தான். ஆனால் சேர்ந்த சவுதி என்ற இளம் பெண் தினமும் 70 லட்சம் ஷாப்பிங் செய்வதாகவும் அவர் தினமும் பல்வேறு நகரங்களுக்கும் நாடுகளுக்கும் சென்று தனது ஷாப்பிங் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

அவர் எங்கு பயணம் செய்தாலும் விதவிதமான ஆடைகள் மற்றும் கைப்பைகள் வாங்குவதாகவும் உயர் ரக ஹோட்டலில் சாப்பிடுவதாகவும் நகைகள் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதாகவும் கூறப்படுகிறது. தான் தினமும் 70 ரூபாய் செலவு செய்வதை தனது கணவர் ரசிப்பார் என்றும் தன்னால் தான் துபாயின் பொருளாதார உயர்கிறது என்று அவர் கூறி வருவதாகவும் அந்த பெண் தெரிவித்துள்ளார்.

தினமும் 70 லட்சம் செலவு செய்யும் சவுதியின் கணவர் துபாயில் உள்ள ஒரு பிரபல தொழிலதிபராவார். இவர் நான்கு வயதில் துபாய்க்கு வந்து அதன் பிறகு கடுமையான உழைப்பின் மூலம் தற்போது கோடிக்கணக்கான ரூபாய்க்கு சொந்தக்காரரான தொழிலதிபராக உள்ளார்.

தன் மனைவி எவ்வளவு செய்தார் செலவு செய்தாலும் தனக்கு கவலை இல்லை என்றும் அவரது சந்தோஷம்தான் தனக்கு முக்கியம் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் தனது மனைவி தினமும் 70 லட்சம் செலவு செய்வதால் துபாயில் உள்ள வியாபாரிகள் மகிழ்ச்சி அடைவார்கள் என்றும் துபாயின் பொருளாதார முன்னேறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தினமும் 70 லட்சம் செலவு செய்யும் இளம் பெண் குறித்த தகவல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் உங்களுக்காக...