ஒரே ஒரு காதல் பார்வை.. நீரஜ் சோப்ராவுக்கும் மனு பாக்கருக்கும் திருமண வதந்தி குறித்து தந்தை விளக்கம்..!

சமீபத்தில் முடிவடைந்த ஒலிம்பிக்கில் பதக்கம் பெற்ற நீரஜ் சோப்ரா மற்றும் மனுபாக்கர் திருமணம் செய்யப் போகிறார்கள் என்று வதந்தி பரவிய நிலையில் மனுபாக்கரின் தந்தை இதற்கு விளக்கம் அளித்துள்ளார். இந்தியாவின் மனு பாக்கர் மகளிர்…

neeraj manubhakar

சமீபத்தில் முடிவடைந்த ஒலிம்பிக்கில் பதக்கம் பெற்ற நீரஜ் சோப்ரா மற்றும் மனுபாக்கர் திருமணம் செய்யப் போகிறார்கள் என்று வதந்தி பரவிய நிலையில் மனுபாக்கரின் தந்தை இதற்கு விளக்கம் அளித்துள்ளார்.

இந்தியாவின் மனு பாக்கர் மகளிர் துப்பாக்கி சுடும் போட்டியில் வெண்கல பதக்கம் வென்று சாதனை செய்தார் என்பதும் அதேபோல் ஈட்டி எறிதல் போட்டியில் நீரஜ் சோப்ரா வெள்ளி பதக்கம் வென்றார் என்பதும் இருவரும் இந்தியாவுக்கு பெருமை சேர்த்தனர் என்பதும் தெரிந்தது.

இந்த நிலையில் ஒலிம்பிக் நிறைவு விழாவில் நீரஜ் சோப்ரா, மனு பாக்கர் ஆகிய இருவரும் பங்கேற்ற நிலையில் சில நிமிடங்கள் இருவரும் ஒருவருக்கொருவர்  பேசிக் கொண்டிருந்த நிலையில் அது குறித்த வீடியோ இணையத்தில் வைரல் ஆனது. உடனே இருவருக்கும் காதல் பார்வை ஏற்பட்டதாகவும், இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள் என்ற வதந்தி பரவியது.

அது மட்டும் இன்றி மனுபாக்கரின் அம்மாவும் நீரஜ் சோப்ராவுடன் பேசிக்கொண்டிருந்ததை எடுத்து தனது வருங்கால மருமகனுடன் பேசிக் கொண்டிருக்கிறார் என்றும் பதிவுகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மனு பாக்கர் தந்தை விளக்கம் அளித்துள்ளார். மனுபாக்கர் இன்னும் சின்ன பெண் தான், அவருக்கு திருமணம் செய்து வைக்கும் வயது என்னும் வரவில்லை, எனவே அதைப் பற்றி இப்போது நாங்கள் யோசிக்கவும் இல்லை என்று கூறியுள்ளார். இதனை அடுத்து திருமண வதந்தி முடிவுக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது.