கடித்த பாம்பை கையில் எடுத்து கொண்டு மருத்துவமனை வந்த வாலிபர்.. மருத்துவர்கள் அதிர்ச்சி..

  ஜெய்ப்பூரில் உள்ள ராஜஸ்தான் சுகாதார அறிவியல் பல்கலைக்கழக மருத்துவமனையில் தன்னை கடித்த பாம்பை, அதுவும் உயிருடன், ஒரு பைக்குள் வைத்து எடுத்துக்கொண்டு ஒருவர் மருத்துவமனைக்குள் நுழைந்ததால், மருத்துவமனையில் இருந்த மருத்துவர்களும் நோயாளிகளும் அதிர்ச்சி…

snake

 

ஜெய்ப்பூரில் உள்ள ராஜஸ்தான் சுகாதார அறிவியல் பல்கலைக்கழக மருத்துவமனையில் தன்னை கடித்த பாம்பை, அதுவும் உயிருடன், ஒரு பைக்குள் வைத்து எடுத்துக்கொண்டு ஒருவர் மருத்துவமனைக்குள் நுழைந்ததால், மருத்துவமனையில் இருந்த மருத்துவர்களும் நோயாளிகளும் அதிர்ச்சி அடைந்தனர்.

சுமார் நான்கு அல்லது ஐந்து நாட்களுக்கு முன்பு நடந்ததாக கூறப்படும் இந்த சம்பவம், மருத்துவமனையின் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி, தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில், ஒரு நபர் கறுப்பு பையுடன் நிற்கிறார். அந்த தருணத்தைப் பதிவு செய்யும் ஒருவர், அவரிடம் “ஏற்கனவே கடித்துவிட்டதா?” என்று கேட்க, அந்த நபர் புன்னகைத்தபடியே “ஆம், ஏற்கனவே கடித்துவிட்டது” என்கிறார். பின்னர், அந்த பையைத் திறந்து, பாம்பை அதன் முகத்தை பிடித்து வெளியே எடுக்கிறார். அருகில் நின்றிருந்த மற்றொருவர் கூட பாம்பை தொட முயல்வது அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.

மருத்துவமனையின் மருத்துவக்கண்காணிப்பாளர் டாக்டர் மகேஷ் மங்கல், அந்த நபர் பாம்பை மருத்துவர்கள் அடையாளம் கண்டு, அது விஷத்தன்மை உள்ளதா என்பதை அறிய உதவவே கொண்டு வந்ததாக தெரிவித்தார் என டாக்டர் மங்கல் விளக்கினார்.

உயிருள்ள பாம்பு மருத்துவமனைக்குள் வந்ததால், மருத்துவர்கள் மற்றும் நோயாளிகள் மத்தியில் பெரும் பீதியும் அச்சமும் ஏற்பட்டது. மருத்துவர்கள் நிலைமையை கட்டுப்படுத்தி, அந்த நபரை மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் அவரது குடும்பத்தினர் பாம்பை எடுத்து சென்றனர்.

மருத்துவமனையில் இருந்த மருத்துவர்கள் உடனடியாக செயல்பட்டு, அந்த நபருக்கு சிகிச்சை அளிக்க தொடங்கினர். அதே நேரத்தில், பாம்பை பாதுகாப்பாக அப்புறப்படுத்தவும், அங்கிருந்த அனைவரின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. மேலும் வனவிலங்கு நிபுணர்களுக்கும் உடனடியாக தகவல் கொடுத்து வரவழைக்கப்பட்டனர்.

ஜெய்ப்பூரில் நடந்த இந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்ட பாம்பின் சரியான வகை இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. அது விஷத்தன்மை கொண்டதா என்பதும் தெளிவாக தெரியவில்லை. இருப்பினும், நல்ல வேளையாக, அந்த நோயாளி தற்போது சீராக இருப்பதாகவும், அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

https://x.com/chennaitodaynew/status/1938431575005470730